arrow_back

ஆறு என்னும் காலப்பயண இயந்திரம்

ஆறு என்னும் காலப்பயண இயந்திரம்

Praba Ram,Sheela Preuitt


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி ஆறுகள் நமக்கு சொல்லக்கூடிய கதைகள் எல்லாவற்றையும் கற்பனை செய்து பாருங்கள்! முதன்முதலில் மனிதன் உணவைப் பயிரிட்டு வளர்க்க விரும்பியபோது ஆறுகள் இருந்தன. மனிதர்கள் நகரங்களை உருவாக்கத் தொடங்கியபோதும் அவை அங்கே இருந்தன. அவை இன்னும் அங்கே இருக்கின்றன- தண்ணீர், உணவு மற்றும் சில வாழ்வாதாரங்களை வழங்கிக்கொண்டு. ஆனால் அவை குப்பைத் தொட்டிகளைப் போல நடத்தப்படுகின்றன. ஆறுகளுக்கு நம்மை எப்படி கவனித்துக்கொள்வது என்று தெரியும், ஆனால் அவை நம் எதிர்காலத்திலும் நிலைத்து இருக்கவேண்டுமென விரும்பினால், அவற்றை நாம் அக்கறையோடு கவனித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுவேயாகும்.