aatukutti

ஆட்டுக்குட்டி

ஆட்டுக்குட்டி சுவையான புல்லைத் தேடி அலைந்து திரிகிறது, அவள் அம்மா ஆட்டிடம் இருந்து எவ்வளவு தூரம் சென்றாள் என்பதை உணரவில்லை.

- Tamil Montessori

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஆட்டுக்குட்டி சுவையான புல்லைத் தேடிச் சென்றாள்.

மேலே வானம் நீலமாக இருந்தது. ஆனால் அவள் மேலே பார்க்கவில்லை.

கீழே நதி குமிழ்ந்தது.

ஆனால் ஆட்டுக்குட்டி அதன் ஓசையைக் கேட்கவில்லை.

ஒரு பறவை அவளை அழைத்து, "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டது.

ஆனால் ஆட்டுக்குட்டி பதில் அளிக்கவில்லை.

அவள் சுவையான புல்லைத் தேடி நடந்தாள்.

அவள் நடந்தப்படி, ஆட்டுக்குட்டி தன் அம்மா  ஆட்டிடம் இருந்து மேலும் மேலும் விலகிச் சென்றாள்.

ஆட்டுக்குட்டி சுவையான புல்லைக் கண்டுபிடித்தாள். அவள் நன்றாக சாப்பிட்டாள்.

அவள் அம்மா ஆட்டிடம் இருந்து வெகுதூரம் நடந்து விட்டாள்.

ஆட்டுக்குட்டி எங்கே சென்று விட்டது என்று அம்மா ஆடு யோசித்தார். அவர் சோளக்காட்டில் தேடினார், ஆனால் ஆட்டுக்குட்டி அங்கே இல்லை.

அம்மா ஆடு நதிக்கு ஓடினார். ஆனால் ஆட்டுக்குட்டி அங்கேயும் இல்லை.

"எங்கே இருக்கிறாய், ஆட்டுக்குட்டி?" என்று அம்மா ஆடு கூச்சலிட்டார்.

ஒரு பறவை அம்மா ஆட்டை அழைத்து, "ஆட்டுக்குட்டி பாலத்தின் மறுபுறத்தில் உள்ள சுவையான புல்வெளியில் தூங்குகிறாள்" என்றது.

அம்மா ஆடு பாலத்தைக் கடந்து, சுவையான புல்வெளிக்குச் சென்றார்.

அங்கே அவர் ஆட்டுக்குட்டி தூங்குவதைப் பார்த்தார்.

"எழுந்திரு, ஆட்டுக்குட்டி", என்று அம்மா ஆடு மெதுவாகக் கூறினார். "நீ தொலைந்து விட்டாய்!"

"நான் தொலைந்து போகவில்லை... நான் இங்கேயேதான் இருந்தேன்!" என்று ஆட்டுக்குட்டி கூறினாள்.