achchamillai achchamillai

அச்சமில்லை அச்சமில்லை!

ஒரு சின்ன பெண் தனியாகச் செல்லும் போது எப்படி தைரியமாக இருக்கிறாள் என்று பார்ப்போமா?

- karthik s

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான் ஒரு பெரிய பெண். அதனால் நான் வீட்டிற்கு வெளியே தனியாகச் செல்வேன்.

ஒரே இருட்டாக உள்ளது!யாராவது இருக்கிறீர்களா? யாரங்கே?

ஓ, வெறும் பூனை தான் அது!நான் பயப்படவில்லை.

வெளியே ஏதோ கருப்பாகத் தெரிகிறதே! அது என்னவாக இருக்கும்?

ஓ, வெறும் கிணறு தான் அது. நான் பயப்படவில்லை!

என்ன அந்த சத்தம்? கிரீச் கிரீச்சென்ற அந்த சத்தம்!

என்ன அது?

ஓ, அது என்ன தங்கை தான், கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கிறாள். நான் பயப்படவில்லை.

காலடிச் சத்தம் கேட்கிறதே! யாரது? யாரது?

என்னுடைய அம்மா தான் அது. வயற்காட்டிலிருந்து வீட்டுக்கு வந்து விட்டாள்.

நான் இப்போது ஒரு பெரிய பெண்.

எதைக் கண்டும் நான்பயப்படுவதில்லை!