adho amma

அதோ அம்மா

அசோக்கும் அப்பாவும் பாப்பாவுடன் கடைத்தெருவிற்கு செல்கின்றனர். ஆனால் பாப்பாவுக்கு யாரைப் பார்த்தாலும் அம்மாவைப் போலவே தெரிகிறதே? ஏன்?

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“இதில எழுதியிருக்க எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க. ஆணி, கயிறு, பூக்களும் வேணும். பாப்பாவையும் கூட்டிட்டுப் போங்க” என்றார் அம்மா. அசோக்கும் அப்பாவும் பாப்பாவை தூக்கிக்கொண்டு கடைத்தெருவுக்குக் கிளம்பினர்.

“அம்மா!” என்று பாப்பா சுட்டிக்காட்டினாள்.

“இல்ல, பாப்பா! அது அம்மா இல்ல. அம்மாவுக்கு  முடி நீளமா, கருப்பா இருக்குமே” என்று புன்னகைத்தார் அப்பா.

“அம்மா!” என பாப்பா கை தட்டினாள். “இல்ல, பாப்பா! அது அம்மா இல்ல. அம்மாவுக்கு தாடி கிடையாதே” என்று சிரித்தார் அப்பா.

“அம்மா!” என்றாள் பாப்பா.

“இல்ல பாப்பா. அது அம்மா இல்ல. அம்மாவுக்கு இவங்களவிட வயசு ரொம்ப கம்மி” என்று மறுபடியும் சிரித்தார் அப்பா.

அப்பாவும் அசோக்கும் அம்மா எழுதித் தந்த எல்லாவற்றையும் வாங்கி வந்தனர். அம்மா அதிலிருந்து ஆணிகள், கயிறு மற்றும் பூக்களை எடுத்துக்கொண்டார்.

டக் டக் டப்பக்!

அம்மா என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்! பாப்பாவுக்காக ஒரு தள்ளுவண்டி செய்திருக்கிறார்! எல்லோரும் பூங்காவுக்குக் கிளம்பிவிட்டார்கள்.

“பாப்பா கடைத்தெருவுல பார்த்த எல்லோரையும் நீதான்னு நினைச்சுகிட்டா. ஏன்னு தெரியல” என்று அப்பா அம்மாவிடம் கூறினார். “ஏன்னா, நம்ம பாப்பா புத்திசாலி பாப்பா” என்றான் அசோக்.

அட! இப்போது சிரிப்பது யார்? பாப்பாதான்.