அக்கா! அக்கா! வானம் ஏன் நீலமாய் உள்ளது?
S. Jayaraman
சின்ன தம்பியின் விஷயதாகம் நிரம்பிய மனதில் எப்பொழுதும் பெரிய அக்காவிடம் கேட்பதற்காக நிறைய கேள்விகள் இருக்கும். அக்காவிடம் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் இருக்கும் என்பதும் தம்பிக்கு தெரியும். ஏனென்றால் அக்காதான் எப்பொழுதும் பெரிய பெரிய புத்தகங்களாக படிக்கிறாரே!இந்த புத்தகத்தில் சின்ன தம்பிக்கு வானம் ஏன் நீலமாக உள்ளது என்று சந்தேகம், பெரிய அக்காவோ தம்பியிடமே, அதற்கு காரணம் என்னவாக அவன் நினைக்கிறானென்று கேட்க, தம்பியின் கற்பனை கரை புரண்டோடுகிறது. வானம் நீலமாக இருக்க காரணம் வானத்தில் காயப்போட்ட பெரிய நீலப் புடவையாக இருக்குமோ என்பதில் தொடங்கி, பல பல பதில்கள்.கடைசியில் அக்கா சரியான விடையை சொல்கிறார். குதூகலமூட்டும் இந்த புத்தகத்தை படித்து விடையை தெரிந்து கொள்ளும்முன் நீங்களே சொல்லுங்கள்: வானம் ஏன் நீலமாக உள்ளது?