அக்கா! அக்கா! ஏன் பொருட்கள் மேல்நோக்கி விழுவதில்லை?
S. Jayaraman
சின்னத்தம்பியின் ஆர்வம் நிரம்பிய மனதில் எப்போதும் அக்காவிடம் கேட்பதற்காக நிறைய கேள்விகள் இருக்கும். அக்காவிடம் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் இருக்கும் என்பதும் தம்பிக்கு தெரியும். ஏனென்றால் அக்காதான் எப்பொழுதும் பெரிய பெரிய புத்தகங்களாக படிக்கிறாரே! இந்த புத்தகத்தில் சின்னத்தம்பியின் சந்தேகம், ஏன் பொருட்கள் கீழே விழுகின்றன? என்பதுதான். அவை மேல்நோக்கி விழுந்தால் எத்தனை குஷியாக இருக்கும். சின்னத்தம்பி பொருட்களை தூக்கி மேலே எறிந்து அவை கீழே விழ, அதை சுத்தம் செய்து சலித்த அம்மா இனிமேல் முணுமுணுக்காமலாவது இருப்பார். அக்கா சிரித்து விட்டு, சின்னத்தம்பியின் புத்திசாலித்தனமான கேள்விக்கு சரியான பதில் சொல்கிறார்