அலைவாய்க் கரையில்
ராஜம் கிருஷ்ணன்
'அலைவாய்க் கரையில்' நாவல் ஒரு மீனவக் கிராமத்தின் கதையைச் சொல்கிறது. இந்த நாவல் களத்தை உருவாக்க ராஜம் கிருஷ்ணன் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் கள ஆய்வு செய்துள்ளார். மரியான் என்ற மீனவ இளைஞனைச் சுற்றிக் கட்டப்பட்ட இந்தக் கதையில் எண்ணற்ற கதை மாந்தர்களும் சமூகச் சூழலும் விவரிக்கப்பட்டுள்ளன.