alana the baby crocodile

அலனாவும் அப்பாவும்

அலனா, அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு நாள் ஆற்றை கடக்கிறாள். என்ன நடந்தது ?

- Kirthiga Ravindaran

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அலனா ஒரு குட்டி முதலை. அவள் தினமும்  அப்பாவின் முதுகின் மேல் ஏறிக்கொண்டு, ஆற்றில் விளையாடி மகிழ்வாள். அலனாவுக்கு, அப்பா என்றால் கொள்ளைப் பிரியம்.

ஆற்றில் தனியாக நீந்த வேண்டும் என்று அலனாவுக்கு ஆசை. ஆனால், அது ஆபத்தானது என்றார் அப்பா.

"நீ பெரியவள் ஆனதும், ஆற்றில் தனியாக நீந்தலாம். இப்போது, என் முதுகில் ஏறிக்கொள், நான் உன்னை அழைத்துச் செல்கிறேன் !" என்றார் அப்பா.

ஒருநாள், அப்பா உறங்கிக்கொண்டிருந்த வேளையில், அலனா அமைதியாக ஆற்றை கடக்க முயன்றாள்.

"என்ன ஒரு அழகான காட்சி ! ஆஹா ! என்னால் நீந்த முடிகிறதே !" என்றாள் அலனா.

நீரில் மிதந்துக்கொண்டிருந்த கற்களையும் சிறிய மரங்களையும் கண்டாள்.

அவள் நீந்திக்கொண்டிருந்த வேளையில், ஒரு நீர்க்கீரியைப் பார்த்தாள்.

"வணக்கம் அலனா !" என்றது நீர்க்கீரி.

ஆனால் பயத்தில் அலனா, அதை வணங்காமல், வேகமாக நீந்திச் சென்றாள் !

திடீரென்று, தண்ணீரிலிருந்து ஒரு பெரிய விலங்கு குதித்து. அது வேறு யாருமல்ல, ஒரு டால்ஃபின் !

"வணக்கம் அலனா !" என்று கூறிய டால்ஃபின், மீண்டும் தண்ணீருக்குள் சென்றது.

அலனா, ஆச்சரியத்தில் வாயடைந்து போனாள். என்ன ஒரு அழகான டால்ஃபின் !

இன்னும் சற்று தூரம் நீந்திச் சென்றாள் அலனா. பாறையின் மீது ஒரு நீர் நத்தை அமர்ந்திருந்தது.

"வணக்கம் அலனா !" என்றது நீர் நத்தை.அலனாவுக்கு மீண்டும் பயம். அவள் விரைவாக நீந்திச் சென்றாள் !

அலனா களைப்படைந்தாள்.

அப்பாவுக்கு தெரியாமல் ஆற்றை கடந்துவிட்ட கவலை இன்னொறு பக்கம்.

"எப்படி நான் வீட்டுக்குச் செல்வேன் ?"

"எனக்கு பயமாக இருக்கிறது ! எனக்கு அப்பா வேண்டும் !" என்று அலனா அழுதாள்.

அவள் அறியாமல், அப்பா அவளைத் தேடி வந்துக்கொண்டிருந்தார் !

மரத்திலிருந்து காத்திருந்த அலனா, அப்பாவைக் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக்

குதித்தாள் !

"நான் எப்போழுதும் உன் பின்னால் இருப்பேன், அலனா. இனி நீ கவலையின்றி தனியாக நீரில் விளையாடி மகிழலாம் !"

அப்பா இருக்கும் வரையில், அலனா கவலையின்றி விளையாடி மகிழ்ந்தாள் !