ammaa eppa varuvaanga

அம்மா எப்ப வருவாங்க?

அம்மா வேலைக்குச் செல்கிறாள். ரோஜா வீட்டில் இருக்கிறாள். அன்று ரோஜா என்னென்ன செய்தாள்? பார்க்கலாம் வாங்க!

- Logu Venkatachalam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

`

அம்மா வேலைக்குப் போகிறார்.

ரோஜாவுக்கு வருத்தம்.

"நான் இராத்திரிக்குள் வந்துவிடுகிறேன், கண்ணம்மா" என்று அம்மா சொன்னார்.

"எத்தனை மணிக்கு?" ரோஜா கேட்டாள்.

"சரியா இரவு 9 மணிக்கு வருவேன்" அம்மா சொன்னார்.

டிக் டாக்! டிக் டாக். இப்பொழுது நேரம் காலை 6 மணி.

"எனக்கு அம்மா தான் பால் தரணும். நீங்க இல்லை" ரோஜா அப்பாவிடம் சொன்னாள்.

டிக் டாக்! டிக் டாக். இப்பொழுது நேரம் காலை 8 மணி.

"உருளைக்கிழங்கு வாங்கலாம் தாத்தா" ரோஜா சொன்னாள்.

"நேத்து தானே உருளைக்கிழங்கு சாப்பிட்டோம். கத்தரிக்காய் வாங்கலாமா?" தாத்தா கேட்டார்.

டிக் டாக்! டிக் டாக். இப்பொழுது நேரம் காலை 10 மணி.

"பாட்டி, தாத்தா அப்பளம் செய்றாரு. நாம சாப்பிடலாமா?" ரோஜா சத்தமாக சொன்னாள்.

டிக் டாக்! டிக் டாக். இப்பொழுது நேரம் மதியம் 1 மணி.

ப்வாங், ப்வாங்! ரோஜாவின் அக்கா பள்ளியிலிருந்து வந்துவிட்டாள்.

"நான் கோடைக்கு அப்புறம் நான் உன் கூட பள்ளிக்கு வருவேன். ஜாலி இல்லை!" ரோஜா மகிழ்ச்சியுடன் கேட்டாள்.

டிக் டாக்! டிக் டாக். இப்பொழுது நேரம் மதியம் 3 மணி.

"வீட்டுக்குப் போலாம் ரோஜா" அப்பா ரோஜாவைக் கூப்பிட்டார்.

"இன்னும் ஒரு முறை அப்பா" ரோஜா சொன்னாள்.

டிக் டாக்! டிக் டாக். இப்பொழுது நேரம் மாலை 5 மணி.

"குட்டி, தோசை சாப்பிடு. அப்பத்தான் நீ என்னை மாதிரி பெருசா பலமா இருப்பே!", ரோஜா சொன்னாள்.

டிக் டாக்! டிக் டாக். இப்பொழுது நேரம் மாலை 7 மணி.

"தொப்பி மாமா தொப்பியைப் போட்ட பிறகு குரங்குகளும் தொப்பியைக் கீழே போட்டன"

"அம்ம்ம்ம்ம்ம்மா" ரோஜா மகிழ்ச்சியில் சொன்னாள்.

"இன்னக்கி என்ன செய்தே ரோஜா?" அம்மா கேட்டார்.

டிக் டாக்! டிக் டாக். இப்பொழுது நேரம் இரவு 9 மணி.

"இன்னக்கி ரொம்ப ஜாலியா இருந்தது அம்மா!"

அப்பா காலை உணவு கொடுத்தார்.

தாத்தாவோட கத்தரிக்காய் வாங்கினேன்.

தாத்தா அப்பளம் செய்தார்.

அக்காவை பள்ளிக்கூட வேனில் இருந்து கூட்டிக்கிட்டு வந்தேன்.

பூங்காவில் விளையாடினேன்.

நம்ம குட்டிக்கு சாப்பாடு கொடுத்தேன்.

அப்பா தொப்பி மாமா கதை சொன்னாங்க. இப்ப நீங்க வந்திட்டீங்க!

டிக் டாக்! டிக் டாக்.

இப்பொழுது நேரம் இரவு 9 மணி.

உன் நாள்

ரோஜா ஒரு நாள் என்ன செய்தாள் என்று உனக்குத் தெரியும். அதே நேரத்தில் நேற்று நீ என்ன செய்தாய்?

நீ என்ன செய்தாய் என்று படத்தில் வரைந்து காட்டவும்.

1.

2.

3.

4.

5.

6.