ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது.
அது அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகும்.
ஒரு நாள் சிங்கம் தன் குகையில் இருந்து வெளியே வந்தது.
அப்போது மரத்தின் அடியில் ஒரு அணில் பசியோடு இருப்பதை பார்த்தது.
அந்த அணிலுக்கு அருகில் சென்று அதன் முன்பு நின்றது.
சிங்கத்தை பார்த்ததும் அணில் பயந்து நடுங்கியது.
ஆனால் சிங்கம்,"என்னை பார்த்து பயபடாதே"என்று கூறி பழத்தை அணிலுக்கு கொடுத்தது.
அதை பார்த்ததும் அணில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தது.
அணில் அந்த பழத்தை வாங்கி தின்றது.
அணில் மிகவும் சந்தோஷமாக சிரித்தது.பின் அணிலும் சிங்கமும் நண்பர்கள் ஆனார்கள்.