அனிச்ச மலர்
நா. பார்த்தசாரதி
ஒரு துரையில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. ஆனால் எது நல்லது, எது கெட்டது என்று பிரித்தறிய முடியாத பருவத்திலிருக்கும் பெண்கள் அந்தத் துறைக்கு செல்ல அளவுக்கு அதிகமான ஆர்வத்தையும் அவசரத்தையும் காட்டும்போது ஏற்படும் விபரீதங்களே இக்கதை. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் சுமதி என்ற பெண் சினிமாவில் நடித்து திரைவானில் தானும் ஒர் நட்சத்திரமாக மின்ன வேண்டும் என்ற ஆசையில் போலி விளம்பரத்தைப் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கிறாள். விளைவு? சினிமா நடிகையும் ஆகாமல், கல்லூரி படிப்பையும் தொடரமுடியாமல், வாழ்வில் இழக்கக்கூடாத அனைத்தையும் இழந்து நான்கு திசைகளில் எந்த திசைக்கு செல்வது என்ற குழப்பத்தில் திகைத்து நின்றுவிடுகிறாள். இது சினிமாவே தவறு என்று சொல்லும் எதிர்மறைக் கதையல்ல. சினிமா என்ற போர்வையில் சமூகக் குற்றங்களைச் செய்துவரும் கயவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் எச்சரிக்கைக் கதை.