விடியல் வானத்தின் குறுக்கே பறக்கும் வண்ணப் பறவைகளுக்குப் பசியோ பசி. முடிவாய் ஒன்று பிடித்தது அதன் இரையை உண்ணத் திகட்டாத புழு ருசியோ ருசி!
வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணக் கோலம் பூப்பூவாய் தத்திச் செல்லும் அழகோ அழகு. சின்னப் பூச்சிக் கூட்டத்தில் தனித்திருக்கும் ஒன்றெது? பூராவும் ஒரே வண்ணம் சிறப்போ சிறப்பது!
காகிதத்தில் செய்த விதவிதமான பட்டங்கள் ஆட்டம் போட்டு துள்ளிப் பறப்பதைப் பார். ஆகிய மொத்தத்திலே ஒன்று மட்டும் வித்தியாசமாய் கூட்டத்திலே தனித்திருக்கும், அது எது?
சிறிதும் பெரிதுமாய் சதுரங்கள் கட்டங்கள் சிதறிக் கிடக்கின்றன ஆங்காங்கே பார். குறியாய் அவற்றுள் ஒன்றே ஒன்றுதான் விதம் மாறி ஒளிந்திருக்கும் எங்கே சொல் ?
கப்பும் கிளையுமாய் பரந்து விரிந்திருக்கும் வயதான மாமரம், முழுவதும்தான் இலைகள். செப்புக் கிண்ணம் போல அதன்நடுவே மறைந்திருக்கும் பழமொன்று தொங்கும் கிளை எங்கே, கண்டுபிடி?
சீறிப் பாயும் விமானங்கள் அதோ வான உச்சியில் ஒரு நேரான புகைப்பாதை அமைத்துச் செல்லும். கீறலாகத் தெரியும் பாதைகளில் ஒன்று மட்டும் ஒரு வளைந்த வாலாய், ஆஹா அற்புதம் காட்டும்!
கீச்சுக் கீச்சென்றே கூவும் வண்ணப் பறவைகள் அதோ மேலே அமர்ந்திருக்கும் அழகான காட்சி பார். மூச்சைப் பிடித்தபடி அமைதியாக ஒன்று மட்டும் ஏதோ யோசனையில் ஆழ்ந்துள்ளதே அது எது?
வான் முகட்டில் ஒரு பஞ்சுப்பொதி மேகக் கூட்டம் கோடைக்கால நண்பகலில் பளீரென்று மிதக்குதே, தான் மட்டும் வித்தியாசமாய் இருக்கும் ஒரு மேகம் கோடை மழையை சோவென்றே கொட்டுதே, அது எது?
பகல் நீண்ட நாள் பொழுதும் சாய்ந்தது கரிய இருள் நிறைந்த இரவும் வந்தது. சகலமான தெரு விளக்கும் மின்னுது, அதில் சூரியன் போல் ஒளிரும் ஒரு விளக்கு அது எது?
மின்னும் சூரியன் காயும் வேளை தூங்கிவிட்டு
இரவானதும் விழித்துக்கொள்ளும் வௌவால்கள்.
இன்னும் ஒன்று மட்டும் படுசோம்பேறியாய்
மரத்திலேயே தூங்குது, யாரது கண்டுபிடி?
விண்வெளியில் இருக்கும் பல்வேறு கிரகங்கள் பளிச்செனவே வெளிச்சமாக மிதக்கின்றன இங்கே.
மின்னும் அவற்றுள் ஒன்று தனித்துள்ளது எதனால்? பளீரென்ற வளையம் அதை சுற்றியுள்ளது அதனால்!