அண்ணனின் சிரிப்பைத் திருடியது யார்?
சிருவும் அண்ணனும் எப்போதும் சேர்ந்தேதான் விளையாடுவார்கள். அவர்கள் படிக்கட்டுகளுக்குக் கீழே உள்ள குகைகளை ஆராய்ந்துகொண்டும் வீட்டின் பின்னாலுள்ள மாமரத்தில் இருக்கும் வேற்றுகிரகவாசிகளுடன் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பார்கள்.