arun and his dog

அருண் என்ற சிறுவனும் , அவனுடைய நாயும்

அருண் என்ற சிறுவனும் , அவனுடைய நாயும்

- Rahul Saisankalp

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள் அருண் மீன் பிடிக்கச் சென்றான். அந்த நேரத்தில் மழை மிகவும் அதிகமாக பெய்தது.நதி மிகவும் வேகமாக ஓடியது. நதியில் ஒரு நாய் தத்தளித்ததை பார்த்தான்.

அந்த நேரத்தில் கொடையை தலைகீழ் வைத்து நதியில் குதித்தான். அந்த நாயை காப்பாற்றினான்.

அவன் அந்த நேரத்தில் வண்ண வண்ண மீன்களை பார்த்தான்.

வானவில்லயும் சேர்த்து பார்த்தான்.

அவன் கரைக்கு சென்று கொடையை இழுக்கும்போது மீன்கள் கூடையில் விழுந்தன. அவனுக்கு மீன்களும் கிடைத்தது , நாயையும் காப்பாற்றினான்.

சில மீன்களை பூனை சாப்பிட எடுத்துக்கொண்டது. அருண் மீன்களையும் நாயையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு சென்றான்.