beansu thiruvizaa

பீன்ஸு திருவிழா

ஒருநாள் பாட்டி வீட்டு பீன்ஸு தோட்டத்தில் விளையாடும்போது நாம், ஒரு புதிய நண்பரைச் சந்திக்கிறாள் - பீன்ஸ் விதை. அதை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போகிறாள், அவர்கள் திருவிழாவுக்குப் போகிறாள். அங்கு என்ன நடந்தது தெரியுமா?

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இந்தக் கோடை விடுமுறைக்கு, குட்டிக் காளானை பாட்டி வீட்டுக்கு அனுப்புகிறார் அம்மா.

அதிகாலையிலேயே எழுந்து, பாட்டியோடு போகிறாள் காளான்...

அவர்கள் பீன்ஸ் தோட்டத்துக்குப் போகிறார்கள்.

பென்சில் நீளத்தில் இருக்கும் பீன்ஸுகள் காளானைப் பார்த்து விளையாட்டாகச் சிரிக்கின்றன.

மதியம் வெயிலானதும், பாட்டியும் காளானும் உட்கார்ந்து பீன்ஸ் சோற்றை சீனி தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள்.

வயலில் வெயிலே இல்லை.

இலைகள் எழுப்பும் சத்தமும் இதமாக இருக்கிறது.

”ஹலோ, பீன்ஸ் விதையே.”

“எழுந்திரு, காளான்!”

காளான் வியப்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருக்க பீன்ஸ் விதை அவளை இழுத்துப் போகிறது.

”நான் பச்சைப் பட்டாணி.” “நான் முளைகட்டிய பயிறு.”“நான் பீன்ஸ் விதை.” ”நானும் பீன்ஸ் விதை

டெட்* வரப்போவுது. என்னிடம் சொல்லவோ, நிறைய கதைகள் இருக்குது. சீக்கிரமா போலாம் வா”

*வியட்நாமிய புதுஆண்டு

சந்திர

புதுவருடம்

பாட்டி பீன்ஸை நீரில் போட்டால்

நாங்கள் மஞ்சளாக மாறிப்போவோம்

இதுதான் பன்றிக்கறியும்

ஒட்டும் சோறும் வைத்துக்கட்டிய

வாழை இலை

”பான்ஹ் சுங்” சதுரமாக இருக்கும்.

“பான்ஹ் டெட்” வட்டமாக இருக்கும்.

அதில் ஊறுகாய் போடப்பட்ட முளைகட்டிய பயிறும் சேர்ப்பார்கள்.

அதனால் சாப்பாடு செம சூப்பராய் ஆகிவிடும்.

நீரில் போட்ட ஒட்டும் சோறு.

பீன்ஸைச் சுற்றி சின்ன சின்ன உருணைகளாகப் பிசைந்து.

கட்டிகளாய் சுற்றுவதில் பாட்டி செம கெட்டிக்காரர்.

புளிக்கவைத்த ஒட்டும் சோறை அடுத்து

நாலு- முனைகொண்ட அரிசிக் கொழுக்கட்டைகள்

அப்படித்தான் புதுவருடத்துக்கும் பொருள் சேரும்

ஒட்டும் சோற்றுக் கட்டிகள், வேகவைத்த கட்டிகள்

பாட்டி எடுத்து மேசையில் வரிசையாக வைக்கிறார்.

”சாப்பிடுறியா? சாப்பிடுறியா?”

“அம்மா பன்னியும், குட்டிப் பன்னிகளும்”

என்று சொல்கிறது ஒரு நட்சத்திர விளக்குகாளான் விளக்கை விட பளிச்சென்று சிரிக்கிறாள்.

ஹிஹிஹிஹிஹி

“என்ன நினைத்து சிரிக்கிறாய்?” என்று கேட்டார் பாட்டி.

தூக்கம் கலைந்து காளான் எழுந்தாள்.

“என்ன வேண்டும் ராத்திரிச் சாப்பாட்டுக்கு?” என்று கேட்டார் பாட்டி.

”பச்சைப் பயிறு மாவும் சீனியும் சேர்த்த இனிப்பு

பச்சைப் பயிறும், வேகவைத்த பன்னிக் கறியும், கூட அரிசிக் கூழும்

மீன் கறியும், முளைகட்டிய களைக்கோசும்

டோஃபு கூட முளைகட்டிய பீன்ஸு.”

காளான் சிரித்தபடி, அன்றிரவு பாட்டியிடம் கதை சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

அந்தக் கதைக்குப் பெயர் “பீன்ஸ் திருவிழா”.

பான்ஹ் சுங்(சதுர அரிசிக் கட்டி) பான்ஹ் டெட்(வட்ட அரிசிக் கட்டி)க்காக ஒரு கவிதை

இலையை சுற்றி இருக்கும்

ஒட்டும் சோறும் பச்சை பீன்ஸும்

நடுவில் பன்னிக் கறிதான்

சுத்தி சோறும் பீன்ஸுமாய்

ஒன்று சதுரம், ஒன்று வட்டம்

ஊறுகாயை மறக்காமல்

ஏப்ரிகாட் பூவுடனே சேர்த்தால்

வருது எந்தன் டெட்டும்

பிரமிட் போலிருக்கும் அரிசிக் கட்டிக்காக

சாம்பல் நீரில் ஒட்டும் சோறு

வைத்துக் கட்டிய பச்சை பீன்ஸு

மொறுமொறுப்பாய்

உள்ளே எதுவும் இல்லாமல்

வெள்ளைச் சீனியில் நனைத்து

பிரமிடின் உள்ளே

இலைக்கு கீழே

தங்கம் போல

வெயில்காலத்தை கூப்பிடும்