கோடைக்காலத்தில் ஒரு நாள், ராமு அழகிய காற்றாடி ஒன்றைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான்.
அது மிக உயரத்தில் சீராகப் பறந்தது.
ராமுவைப் போன்றே பல குழந்தைகள் பல வண்ண காற்றாடிகளைப் பறக்கவிட்டனர்
தட்டான் வடிவ காற்றாடி, பறவை வடிவ காற்றாடி, டால்பின் வடிவ காற்றாடி என ஒவ்வொன்றும் மிக அழகாக இருந்தன
குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினர்