bee and butterfly

தேனீயும்,பட்டாம்பூச்சியும்

friendship

- myfirstschool international

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு  தோட்டத்தில்  வண்டு, பட்டாம்பூச்சி, தேனீக்கள்  வசித்து  வந்தன.

அதில்  தேனீ  மட்டும்  நண்பர்களோடு  விளையாடி  விட்டு, தன்  கூட்டிற்குத்தேவையான  தேனை  எடுத்துச்செல்லும்.

ஒரு  நாள்  திடீரென  தேனீ  மிக சோர்வாக  காணப்பட்டது.அதற்கு  உடல்நலம்  சரியில்லை   என மற்ற நண்பர்கள் அறிந்து கொண்டனர். பாவமாக  இருந்தது.

.

சோர்வாக  இருந்ததால்  அய்யோ! அதனால்  பறக்க   முடியவில்லையே!

மரத்தைப்  பற்றிக்கொண்டு  ஆழ்ந்த  யோசனையில்  இருந்தது.

அப்போது  அங்கு  வந்த பட்டாம்பூச்சி   தேனீயைப்பிடித்து  பறந்தது.தேனீ   முகமலர்வோடு  பட்டாம்பூச்சியுடன்  பறக்க ஆரம்பித்தது.