blessing

ஆசீர்வாதம்

வீட்டுக்குள் புகுந்து நம்மை ஆசீர்வதிக்கும் யானைகள்

- Naresh Sivaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஷங்கர், என்ன, இன்னிக்கு இலைல சாப்படலாமா...

ஆன் ... செரி பா ... இதோ அருவா கத்தி எடுத்துட்டு வரேன்

கட கடவென்று ஓடிச் சென்று, கருடன் மூக்கைப் போல் வளைந்து நிற்கும் அந்த கத்தியுடன் வந்தான்

கொல்லைப் பக்கத்தில் உள்ள எங்கள் வாழைக் காட்டுக்குச் சென்றோம்..

அப்பா, இருக்கறதுலயே பெரிய இலையா பறிப்போம்... வானத்தையே தொடுதே ..அந்த இலை

சுவர் மேல் ஏறி பறித்தோம் அந்த இலையை ... சர்ர்ர்.. சர்ர்ர்... சர்ர்ர்....

இதை பாட்டி கிட்ட குடுத்து, வாஷ் பண்ண சொல்லு டா ....

பாட்டி......... என்று அவனைப் போல் இரண்டு மடங்கு இருந்த அந்த இலையை

எடுத்துக் கொண்டு சென்றான்

வீட்டுக்குள்ளே இருந்து கணேஷ் கூச்சல் இடும் சத்தம் கேட்டது

உள்ளே எட்டிப் பார்த்தேன் .. இலை பூதம் துரத்த,

கணேஷ் ஓடி, ஒளிந்துக் கொண்டு இருந்தான்

பாவம் டா அது........  அப்பா, போ பா என்றான் ஷங்கர்

பூதம் மறைந்தது..... என் கண்ணுக்கு யானை தெரிந்தது

ஆசீர்வாதம் பண்ணு டா, என்று தலையை நீட்டினேன்

இலை தும்பிக்கை மெல்ல தடவி ஆசீர்வதித்தது ...

கணேஷுக்கு?? இதோ...

பாட்டி , வா.. வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ ...

பத்து ரூபா இந்தா, என்று யானை வாயில் நோட்டை நீட்டினாள் ..

அதுவும் கவ்விக் கொண்டது..

சீ.. பழம் குடுங்க பாட்டி...

என்ன ... தும்பிக்கையை நறுக்கலாமா .... பாட்டி குரல், அடுப்பறையிலிருந்து ...

பதறியது யானை... பிளிறியது...

பசி வயிற்றை கிள்ளி விட்டது... தும்பிக்கையை தானம் தந்தது...

சர்ர்ர்.. சர்ர்ர்... சர்ர்ர் .... அருவாமனை சத்தம்...

இந்தா, என்று இலை தண்டை நீட்டினாள் பாட்டி ...

ஐ ...

குட்டி யானை ஒன்று புதிதாய் பிறந்தது....

யாருக்கு ஆசீர்வாதம் ...