நான் எங்கிருந்து வருகிறேன்?
விண்வெளியில் இருந்தா?
குகை ஓவியங்களில் இருந்தா?
நானொரு பொம்மலாட்ட பொம்மை.
இடமிருந்து வலமாக:.கரகோஸ்: துருக்கியின் நிழல் பொம்மலாட்ட பொம்மை.பங்காரக்கா: கர்நாடகாவின் தோல் நிழல் பொம்மை.புல்சினெல்லா: இத்தாலியின் கையுறை பொம்மை. மிஸ்டர் பன்ச்: இங்கிலாந்தின் பொம்மலாட்ட பொம்மை
என் சகோதர சகோதரிகள் நிறைய பேர் உண்டு.
இடமிருந்து வலமாக:
. காலசூத்ரி பாஹுலியே: மஹாராஷ்டிரத்தின் நூல் பொம்மை. ஓபரா தெய் பூபி: இத்தாலியின் நூல் பொம்மை. யக்ஷகான கொம்பேயட்டா: கர்நாடகத்தின் நூல் பொம்மை. தாரேர் புடுல்: மேற்கு வங்கத்தின் நூல் பொம்மை
ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளும் உண்டு! நிழல் பொம்மைகள், கையுறை பொம்மைகள், கம்பி பொம்மைகள்.
இடமிருந்து வலமாக:.வயாங் குலிட்: இந்தோனேஷியாவின் நிழல் பொம்மை.பவகதகளி: கேரளத்தின் கையுறை பொம்மைகள்.புன்ராக்கு: ஜப்பானின் கம்பி பொம்மைகள்
உலகம் முழுதும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். குண்டாக, உயரமாக, உருண்டையாக, சின்னதாகவும் கூட!
அவர்கள் ஊதா, நீலம், ஆரஞ்சு, கருப்பென பல நிறங்களில் இருக்கிறார்கள்.
இடமிருந்து வலமாக:.மாக்கரீனா: டெல்லியின் பொம்மை.தாரேர் புடுல்: மேற்கு வங்கத்தின் நூல் பொம்மை.பெட்ரூஷ்கா: ரஷியாவின் கோமாளி பொம்மை.ராஜஸ்தானின் நூல் பொம்மை.டெல்லியின் ஆளுயர பொம்மை
இதேபோல ஒரு குடும்பமும் நண்பர்களும் இருந்தால் நன்றாக இருக்குமென நீங்களும் நினைக்கிறீர்கள்தானே?