bottu boing

போட்டூ... பொய்ங்!

போட்டூ விளையாடத் தயாராக இருக்கிறது. ஆனால் வீட்டிலுள்ள அனைவரும் அவன் வருகையைக் கண்டு ஓடிவிடுகின்றனர்! ஏன் ஓடுகிறார்கள்? போட்டூவுடன் நீங்களும் பொய்ங்! என தாவி கண்டுபிடியுங்கள்!

- Abhi Krish

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பொழுது விடிந்தது.

போட்டூ பொய்ங்! என எழுந்தது.

“விளையாட நான் தயாராகிவிட்டேன்!" என்று துள்ளியது.

பொய்ங்!

பொய்ங்!

பொய்ங்!

அண்ணா தன் அறையில் மும்மரமாக ஏதோ செய்துகொண்டிருந்தான்.

ப்ரூம்ம்ம்!

அப்பொழுது... "அண்ணா? இருக்கிறாயா?" என போட்டூவின் குரல் கேட்டது.

உடனே அண்ணா தான் செய்துகொண்டிருந்ததை எடுத்துக்கொண்டு அறையை விட்டு ஓடினான்.

போட்டூ அறைக்குள் நுழைந்தது. சுற்றிப் பார்த்தது.ஆனால் அதற்க்குத் தெரிந்ததோ மடிந்த அண்ணணின் காதுகள் கதவோரம் மறையும் காட்சி மட்டுமே. “நில்! நானும் வருகிறேன்!" என போட்டூ கூச்சலிட்டது.

பொய்ங்!

பொய்ங்!

பொய்ங்!

அப்பா கொட்டகையில் மும்மரமாக ஏதோ செய்துகொண்டிருந்தார்.

கடகடகடகட!

அப்பொழுது அண்ணா உள்ளே வந்து, "போட்டூ வருகிறான்!" என்று கூவினான். உடனே அப்பா தான் செய்துகொண்டிருந்ததை எடுத்துக்கொண்டு

அறையை விட்டு ஓடினார்.

பொய்ங்! பொய்ங்! பொய்ங்! என போட்டூ அறைக்குள் நுழைந்தது. சுற்றிப் பார்த்தது. ஆனால் அதற்குத் தெரிந்தனவோ மடிந்த அண்ணணின் காதுகளும், அப்பா இடுப்பில் குலுங்கும் கருவிகளும் கதவோரம் மறையும் காட்சிகள் மட்டுமே. "நில்லுங்கள்! நானும் வருகிறேன்!" என போட்டூ கூச்சலிட்டது.

பொய்ங்!

பொய்ங்!                         பொய்ங்!

பாட்டி தன் அறையில் மும்மரமாக ஏதோ செய்துகொண்டிருந்தார்.

சிக்கு-சிக்! சிக்கு-சிக்!

அப்பொழுது அண்ணனும் அப்பாவும் உள்ளே வந்து, "போட்டூ வருகிறான்!" என்று கூவினர். உடனே பாட்டி தான் செய்துகொண்டிருந்ததை எடுத்துக்கொண்டு அறையை விட்டு ஓடினார்.

பொய்ங்! பொய்ங்! பொய்ங்! என போட்டூ அறைக்குள் நுழைந்தது. சுற்றிப் பார்த்தது.

ஆனால் அதற்குத் தெரிந்தனவோ மடிந்த அண்ணணின் காதுகளும், அப்பா இடுப்பில் குலுங்கும் கருவிகளும், பாட்டியின் ஜிகுஜிகு துப்பட்டாவும் கதவோரம் மறையும் காட்சிகள் மட்டுமே. "நில்லுங்கள்! நானும் வருகிறேன்!" என போட்டூ கூச்சலிட்டது.

பொய்ங்!

பொய்ங்!

பொய்ங்!

தாத்தா மும்மரமாக ஏதோ செய்துகொண்டிருந்தார்.

டிகுடிகு! டிகுடிகு!

அப்பொழுது அண்ணனும் அப்பாவும் பாட்டியும் உள்ளே வந்து,

"போட்டூ வருகிறான்!" என்று கூவினர். உடனே தாத்தா தான் செய்துகொண்டிருந்ததை எடுத்துக்கொண்டு அறையை விட்டு ஓடினார்.

பொய்ங்! பொய்ங்! பொய்ங்! என போட்டூ அறைக்குள் நுழைந்தது. சுற்றிப் பார்த்தது.ஆனால் அதற்குத் தெரிந்தனவோ மடிந்த அண்ணணின் காதுகளும், அப்பா இடுப்பில் குலுங்கும் கருவிகளும், பாட்டியின் ஜிகுஜிகு துப்பட்டாவும், சாயம் சொட்டும் தாத்தாவின் வாலும் கதவோரம் மறையும் காட்சிகள் மட்டுமே. "நில்லுங்கள்! நானும் வருகிறேன்!" என போட்டூ கூச்சலிட்டது.

பொய்ங்!

பொய்ங்!

பொய்ங்!

அக்கா தன் அறையில் மும்மரமாக ஏதோ செய்துகொண்டிருந்தாள். டம் ட நகட நகட நகட! டும் ட தகட தகட தகட!

அப்பொழுது அண்ணனும் அப்பாவும் பாட்டியும் தாத்தாவும் உள்ளே வந்து, "போட்டூ வருகிறான்!" என்று கூவினர். உடனே அக்கா தான் செய்துகொண்டிருந்ததை எடுத்துக்கொண்டு அறையை விட்டு ஓடினாள்.

பொய்ங்! பொய்ங்! பொய்ங்! என போட்டூ அறைக்குள் நுழைந்தது. சுற்றிப் பார்த்தது. ஆனால் அதற்குத் தெரிந்தனவோ மடிந்த அண்ணணின் காதுகளும், அப்பா இடுப்பில் குலுங்கும் கருவிகளும், பாட்டியின் ஜிகுஜிகு துப்பட்டாவும், சாயம் சொட்டும் தாத்தாவின் வாலும்,கிணிகிணிக்கும் அக்காவின் கொலுசுகளும் கதவோரம் மறையும் காட்சிகள் மட்டுமே! "நில்லுங்கள்! நானும் வருகிறேன்!" என போட்டூ கூச்சலிட்டது.

பொய்ங்!

பொய்ங்!

பொய்ங்!

அம்மா சமையல் அறையில் மும்மரமாக ஏதோ செய்துகொண்டிருந்தார். ஆ... அம்ம்ம்!

அப்பொழுது அண்ணனும் அப்பாவும் பாட்டியும் தாத்தாவும் அக்காவும் உள்ளே வந்து, "போட்டூ வருகிறான்!" என்று கூவினர். உடனே அம்மா தான் செய்துகொண்டிருந்ததை எடுத்துக்கொண்டு அறையை விட்டு ஓடினார்.

பொய்ங்... பொய்ங்... பொய்ங்...

என அறைக்குள் நுழைந்தது போட்டூ. சுற்றிப் பார்த்தது. ஆனால் அதற்குத் தெரிந்தனவோ மடிந்த அண்ணணின் காதுகளும், அப்பா இடுப்பில் குலுங்கும் கருவிகளும், பாட்டியின் ஜிகுஜிகு துப்பட்டாவும், சாயம் சொட்டும் தாத்தாவின் வாலும், கிணிகிணிக்கும் அக்காவின் கொலுசுகளும், பழரசம் படிந்த அம்மாவின் உடையும் கதவோரம் மறையும் காட்சிகள் மட்டுமே!

போட்டூ வாடி வருந்தித் தரையில் அமர்ந்தது."என்னுடன் விளையாட யாருக்குமே விருப்பமில்லை!" என தேம்பித் தேம்பி அழுதது.

திடீரென போட்டூவின் காதுகள் நிமிர்ந்தன.

யாரோ... பாடும் ஓசை கேட்டது!

போட்டூ அந்த இசையைத் தேடித் தோட்டத்திற்குச் சென்றது.

பொய்ங்!

பொய்ங்!

பொய்ங்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!எங்கள் செல்ல போட்டூவிற்கு...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அடடா! போட்டூவிற்காகவே அனைவரும் ஒரு தித்திக்கும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்!

எத்தனை அழகான பரிசுப்பொருட்கள்!

அண்ணன் செய்த விமானம் ப்ரூம்ம்ம் என பறந்தது. அப்பா செய்த மிதிவண்டி கடகடகடவென ஓடியது.

பாட்டி செய்த வீரனுடை சிக்கு-சிக் சிக்கு-சிக் என காற்றில் ஆடியது. தாத்தா செய்த தலையாட்டி பொம்மை டிகுடிகுடிகுடிகு என அசைந்தது. அக்கா செய்த டமாரம் டம்-ட -நகட டம்-ட-நகட என இசைத்தது.

அம்மா செய்த கேரட் அல்வாவை போட்டூ ஆ... அம்ம்ம் என சுவைத்தது!

போட்டூவிற்கு மகிழ்ச்சியோ-மகிழ்ச்சி!

பொய்ங்! பொய்ங்! பொய்ங்!