boy and dog

ஒரு நாயும் சிறுவனும்

ஒரு சிறுவன் நாயை காப்பாற்றிய கதை

- Haasini Saisankalp

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு பையன் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தான்.

அப்போது கடலில் ஒரு நாய் ஆபத்தில் இருந்ததை அவன் பார்த்தான்.

பிறகு அவன் கையில் இருந்த குடையை பயன்படுத்தி அந்த நாயை காப்பாற்றினான்.

அவனும் அந்த நாயும் கடலில் இருந்த மீன்களை பார்த்து ரசித்தனர்.

பிறகு கடற்கரைக்கு திரும்பினர்.

அப்போது ஒரு வானவில்லை பார்த்தனர்.

பின்னர், கூடைக்குள் மீன்களை பிடித்து போட்டான்.

நாயும் அவனும் கூடை நிறைய மீனுடன் வீடு திரும்பினர்.