சிவப்பு பட்டன்
நீல பட்டன்
பழைய பட்டன்
புதிய பட்டன்
மூக்கு பட்டன்ரோஸு பட்டன்எதை நீங்கள் உடுத்தினாலும் பட்டனுக்குத் தெரிந்துவிடும்
பட்டன் பெட்டி பட்டன் கிண்ணம் நீங்கள் தடுமாறினால் போதும் பட்டன் உருண்டு ஓடிப்போகும்
தண்ணீர் போகும் போக்கிலும் திரைக்குப் பின்னாலும் இப்படியும் அப்படியும் பட்டன் தப்பி ஓடிப்போகும்
உடைந்து போனால் தைத்து வைக்கலாம் தொலைந்து போனால் மாற்றி விடலாம்
முன்னே பின்னே இழுக்கலாம் திரும்ப வைத்து முறுக்கலாம்எது வேணாலும் செய்யலாம் எப்படியும் வைக்கலாம்
ஜிப்பை விட நல்லது நாடாவை விட பலமுள்ளது அழுத்தமாக இருக்கும் அயராமல் உழைக்கும்
கேள்வி எதுவும் கேட்காது பொய் எதுவும் சொல்லாது
(எதற்கும் பட்டன் கண்ணில் படாமல் தள்ளியே இருங்கள்.)
பளிச்சென்றும் இருக்கும் மங்கிப்போயும் இருக்கும் பெரிதாகவும் இருக்கும் சிறிதாகவும் இருக்கும்
வட்ட வடிவ பட்டன் சதுர வடிவ பட்டன் எங்கே இருக்கு பட்டன்? அங்கே பாரு பட்டன்!
கீழே பாரு பட்டன் மேலே பாரு பட்டன் பட்டன், பட்டன், பட்டன்…
போதும் போதும் நிறுத்து.