case as intent

எண்ணம் போல் வாழ்கை

வினை விதைப்பவன் வினையருப்பான்.

- Santhiya R

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எலி ஒன்று  மகிழ்சியாக வாழ்ந்து வந்தது. அது எப்போதும் தன் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டு இருக்கும். இதை நோட்டமிட்ட பூனை ஒன்று எப்படியாவது அந்த எலியை அடித்து திண்ண வேண்டும் என திட்டம் தீட்டியது.

ஒரு நாள் எலி வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்ட பூனை அதை இன்றே சாப்பிட நினைத்து துரத்தியது எலியோ பயந்து ஓட தொடங்கியது. வேகமாக ஓடிய எலி ஒருவழியாக பூனையிடம் இருந்தது தப்பித்தது. மிகவும் மனம் வருந்திய எலி நடந்ததை தன் நண்பன் (நாய்) இடம் கூறியது.

எலிக்கு ஆறுதல் கூறிய நாய். அதே நேரம்  தன் நண்பனை துன்புறுத்திய பூனையின் மீது கோபமாக இருந்தது. அதற்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என எண்ணிது நாய்.

ஒரு நாள் பூனையின் வருகைக்காக காத்து கிடந்தது நாய். பூனை வந்த உடன் பூனை எலியை எப்படி துரத்தியதோ அப்படியே நாயும் பூனையை துரத்த ஆரம்பித்தது.  தன் தவறை உணர்ந்த பூனை  எலியிடம் சென்று மன்னிப்பு கேட்டது தான் செய்த தவறால் நிகழ்நத விளைவை எண்ணி மனம் வருந்தியது பூனை.

இனி யாருக்கும் தீங்கு நினைக்க கூடது என எண்ணிது பூனை.

பூனையின் முடிவை தெரிந்து கொண்ட நாய் மற்றும் எலி பூனையை தன் நண்பனாக ஏற்று கொண்டனர். அனைவரும் மகிழ்சியாக விட்டு கொடுத்து வாழ தொடங்கினர்.

🐈🐀🐕