நந்தினி ஒரு நாள் அவளுடைய ஸ்லேட்டையும் சாக்பீஸ்சையும் எடுத்து ரொம்ப நீள... நீள... நீளமான ரயில் வண்டிய வரைய ஆசைப்பட்டா.
முதல்ல அவ அந்த ரொம்ப நீளமான ரயில் வண்டியோட இஞ்சின் பெட்டிய வரஞ்சா. அந்த இஞ்சின் பெட்டில இருந்து ரொம்ப புகை வரும்.
அச்சொச்சோ !!! இப்ப என்ன பண்றது ஸ்லேட் முழுசும்
இஞ்சினே வரஞ்சிட்டேனே!! இப்ப எப்படி மிக நீளமான ரயில் வண்டி வரையப் போறேன்?? என்று யோசிச்சா நந்தினி...
சாக்பீஸ்சையும் ஸ்லேட்டையும் கீழ வச்சிட்டு யோசிச்சா.... ஹ்ம்ம்ம்ம் ?? ஹ்ம்ம்ம்ம்ம்...???
தரையில முதல் ரயில் பெட்டிய வரைய ஆரம்பிச்சா நந்தினி. அப்புறம் இரண்டாவது, மூன்றாவதுன்னு ரொம்ப நீளமான ரயில் பெட்டிய வரஞ்சு(வரைந்து) முடிச்சிட்டா.
அவளுடைய சாக்பீஸ் எல்லாம் தீர்ந்து போச்சு. அவ வரஞ்சி(வரைந்து) முடிச்சிட்டு எழுந்து அவளோட மிக நீள நீளமான ரயில் பெட்டிய பார்த்தா. அது முழு வாசல் வரைக்கும் இருந்துச்சு.
நந்தினியோட ரயில் வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சு. இப்போ ரொம்ப தூரம் போகப் போகுது... கூ கூஉ....சிக்கு... புக்கு.....சிக்கு...புக்கு...