நந்தினி தன் சிலேட்டையும் சாக்பீஸையும் எடுத்துக் கொண்டாள்.ஒரு மிக நீளமான ரயில் வண்டியை வரைய விரும்பினாள்.
நந்தினி, முதலில் தனது ரயிலின் இஞ்ஜினை வரைந்தாள். அது அதிகமான புகையை விடுவதைப் போல வரைந்தாள்.
நந்தினி இஞ்ஐினை பெரிதாக வரைந்து விட்டதால் சிலேட்டில் இடமே இல்லை.
"அடடா! இப்ப ரயில் பெட்டிகளை எங்கே வரைவேன்?" நந்தினி வியந்தாள்.
நந்தினி சிலேட்டையும் சாக்பீஸையும கீழே வைத்து விட்டு யோசிக்கத் தொடங்கினாள்.
அவள் முதலில் தரையில் ஒரு பெட்டியை வரைந்தாள். பின்னர், இரண்டாவது, மூன்றாவது என வரைந்து கொண்டே சென்றாள்.
சாக்பீஸ் தீரும் வரை.
நந்தினி எழுந்து தான் வரைந்த ரயில் வண்டியைப் பார்த்தாள். ஆஹா!
அவளுடைய ரயில் முழு வாசலையும் அடைத்துக் கொண்டு மிகவும் நீளமாக இருந்தது!
இதோ நந்தினியின் ரயில் தன் மிக நீண்ட பயணத்தைத் தொடங்கியது.
கூ......சிக்கு புக்கு, சிக்கு புக்கு!