chiyuvin mayasakthi

சியுவின் மாயசக்தி

சியு அடுத்தவர்களால் பார்க்க முடியாத உற்சாகமான பொருட்களை பார்க்கிறாள்– பறக்கும் ராக்கெட் மற்றும் கரும்பலகையில் நீந்தும் மீன்கள்! அஜ்ஜி, சியுவின் மாய சக்தியை கண்டு பிடிக்க, அவளைக் கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார்.

- Thilagavathi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சியுவுக்கு பள்ளி செல்ல நேரமாகி விட்டது.

ஆனால் அவள் தன்னுடைய சிவப்பு நிறத் தண்ணீர் பாட்டிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தான் அவளுடைய பாட்டிலா?

அல்லது இது ஒரு ராக்கெட்டா?

சியு பள்ளியில் கரும்பலகையைப் பார்க்கிறாள்.

என்ன ஒரே ஆச்சரியம்!

‘அந்த மீன்கள் கடலில் நீந்துகின்றனவா, என்ன?’

சியு தன்னுடைய காலணிகளில் உள்ள பச்சைக் குமிழைப் பார்க்கிறாள்.

‘இது பார்க்க கொழகொழப்பாய் ஜெல்லி போல் இருக்கிறதே?

இது தவளையா, என்ன?’ என்று நினைக்கிறாள்.

சியு வீட்டுக்கு ஓடிச்சென்று அஜ்ஜியிடம்,

‘‘அஜ்ஜி! எனக்கு மாயசக்தி இருக்கிறது!

பிறரால் பார்க்க முடியாததை என்னால் பார்க்க முடியும்!’’ என்று கூறினாள்.

அஜ்ஜி, தலையை ஆட்டிவிட்டு, ‘‘நாம் கண் மருத்துவரிடம் போகலாமா?

நீ அவரிடம் உன்னுடைய மாயசக்தியைப் பற்றிச் சொல்கிறாயா?’’ என்று கேட்டார்.

மருத்துவர் நிகிதா, சியுவிடம்

எழுத்து அட்டையைக் காண்பித்தார்.

‘‘அந்த எறும்புகள் தாளின் மீது

அணிவகுத்துச் செல்கின்றனவா, என்ன?’’

என்று சியு கேட்டாள்.

மருத்துவர் நிகிதா, சியுவுக்கு கண்ணாடியை அணிவித்தார்.

அந்தப் பெரிய எறும்பு, ஆங்கில எழுத்து ‘E’ ஆக மாறியது.

‘‘நான் என்னுடைய மாயசக்தியை இழந்து விட்டேனா, டாக்டர்?’’ என்று சியு கேட்டாள்.

உன் கண்களை மூடி கொள்; கனவு காண்;

உன்னுடைய மாயசக்தி உனக்குத் திரும்பி வரும்!’’

என்றார் மருத்துவர் நிகிதா.

‘‘சியு! உனக்கு எந்த நிற மூக்குக் கண்ணாடி வேண்டும்?’’

என்று அஜ்ஜி கேட்டார்.

‘‘எனக்குப் பச்சை!’’ என்று சியு சிரித்தாள்.

மூக்குக்கண்ணாடியைக்  கூட்டுக்குள்ளே வைத்து விட்டால்...

சியு தன் மூக்குக்கண்ணாடியை அணியவில்லை.

அதனால் அவளால் தெளிவாகப் பார்க்க இயலவில்லை.

உங்களால் அவளுக்கு உதவ முடியுமா?

இங்கே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் பெயர்கள் என்ன?

இந்தப் பூவில் எத்தனை வட்டங்கள் மறைந்து உள்ளன?

இந்த நட்சத்திரத்தில்

எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

இந்தச் சாளரத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?