christmas parisu

கிறிஸ்துமஸ் பரிசு

சாம் அவனுடய கிறிஸ்துமஸ் பரிசை பார்க்க ஆவலாய் இருந்தான். ஆனால்அது ஒரு ரகசிய இடத்தில் இருந்தது. சாம் என்ன செய்தான் தெரியுமா?

- Jemima Aaron

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சாமுவேல் மிகவும் ஆர்வமுள்ள ஒரு பையன்.

அவனுடய கிறிஸ்துமஸ் பாரிசை பற்றி ஆர்வமாக இருந்தான்

"அம்மா, என் கிறிஸ்துமஸ் பரிசு எங்கே?" சாம் கேட்டான்.

அம்மா புன்னகைக்க, "அது ஒரு இரகசிய இடத்தில் உள்ளது, சாம்" என்று கூறினார்.

"அப்பா, என் கிறிஸ்துமஸ் பரிசு எங்கே?" சாம் கேட்டான்.

அவர் புன்னகைக்க, "அது ஒரு இரகசிய இடத்தில் உள்ளது, சாம்." என்று கூறினார்

"நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்!" சாம் கூறினான்.

"நான் பரிசை தேடுவேன்!"

அவன் தனது தந்தையின் மேசைக்கு பின்னால் பார்தான். அங்கு கண்டது ... சிவப்பு காகிதத்தில் மூடப்பட்ட ஒரு பரிசு பெட்டி.

"ஆனால், இது ராணி மாமிக்கு" பரிசு பெட்டியை படித்து கூறினான்

அவன் தனது பெற்றோர்கள்அறைக்கு சென்றான்.அங்கு கண்டது ... தங்க காகிதத்தில் மூடப்பட்ட ஒரு பரிசு பெட்டி.

"ஆனால், இது மணி மாமாவுடியது," பரிசு பெட்டியை படித்து கூறினான்

பின்னர் அம்மாவின் அலமாரியை திறந்தான். அங்கு கண்டான்....ஊதா நிற காகிதத்தில் மூடப்பட்ட பரிசு பெட்டியை.

"எங்கள் மகள் சோஃபிக்கு" என குறிப்பில் எழுதப்பட்டு இருந்தது

சாம் தனது அறைக்கு திரும்பி சென்று மிகவும் சோகமாக  உட்கார்ந்தான். அவன் இப்போது தன்னுடய பரிசை கண்டுபிடிக்க விரும்பினான்!

அப்போது தன்னுடய படுக்கையின் கீழ் வெள்ளி காகிதத்தால் மூடப்பட்ட ஒரு பரிசு பெட்டியை பார்த்தான்!

அந்த உரையை படித்து "இது எனக்கு தான்!"  என்று  ஆர்ப்பரித்தான்

சாம் பெட்டியை அசைத்து பார்த்தான். அவன் தனது கைகளில் அதை சுற்றினான்.

உள்ளே என்ன இருந்தது? ஓ, அது என்னவாக இருக்க கூடும்?

அதைத் திறந்தானாஅல்லது இரகசிய இடத்தில் விட்டுவிட்டானா?

சாம் தனது பரிசை என்ன செய்தார் தெரியுமா? அதை அறிய ஆவலாய் இருக்கிறதா?

அவன் படுக்கையின் கீழ் மீண்டும் அதை வைத்து, கிறிஸ்துமஸ் வரை காத்திருக்க முடிவு செய்தான்.