chunnu munnuvudan oru naal

சுன்னு முன்னுவுடன் ஒரு நாள்

நீரில் விளையாடி கலாட்டா செய்யும் சின்னு முன்னுவுடன் சேர்ந்து ஆட்டம் போடுங்கள். ஒரு இனிய இரவு உறக்கத்திற்கு அருமையான வழி இதோ.

- karthik s

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஹய்யா ! சுன்னு மற்றும் முன்னுவின் குளியல் நேரம் அது!

இன்று அம்மா சின்னு மற்றும் முன்னுவிற்கு ஒரு புதிய பாட்டு பாடுகிறாள்.

லா லா லா லா...

சுன்னு மற்றும் முன்னுவின் குளியல் நேரம் அது!

அம்மா சின்னு மற்றும் முன்னுவை அழுக்கு போகும்படி குளிப்பாட்டுகிறாள்

சர் சர் சர் சர் ...

சுன்னு மற்றும் முன்னுவின் குளியல் நேரம் அது!

சோப்புக் குமிழிகளும் சந்தோஷமும் சுன்னுவிற்கும் முன்னுவிற்கும்

தப்! தப்! தப்!

சுன்னு மற்றும் முன்னுவின் குளியல் நேரம் அது!

குறும்புக்கார சுன்னுவையும் முன்னுவையும் பிடிக்க அம்மா ஓடுகிறாள்

ஹா ஹா ஹா ஹா ...

சுன்னு மற்றும் முன்னுவின் குளியல் நேரம் முடிந்தது,

சுத்தப் பத்தமான சுன்னுவையும் முன்னுவையும் அம்மா அணைக்கிறாள்

ம்ம்ம்ம்ம்...

சுன்னு மற்றும் முன்னுவின் குளியல் நேரம்  முடிந்தது,

ஆனால் சுன்னுவிற்கும் முன்னுவிற்கும் பைஜாமா போட்டுவிடுவது கடினம்

ஓ ஓ ஆ...

சுன்னு மற்றும் முன்னுவின் குளியல் நேரம்  முடிந்தது,

ஹய்யா! சின்னு மற்றும் முன்னுவின் இரவு உணவு வேளை அது

ருசியோ ருசி...

சுன்னு மற்றும் முன்னுவின் இரவு உணவு வேளை முடிந்தது,

தாத்தாவும் பாட்டியும் சின்னு முன்னுவிற்கு முத்தம் குடுப்பதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்

உம்மம்மா உம்மம்மா உம்மம்மா...

இன்றைய விளையாட்டு நேரம் சுன்னு முன்னுவிற்கு முடிந்தது,

சுன்னு முன்னுவிற்கு இப்போது அமைதியாக தூங்கும் நேரம்

கொர்ர்ர்ர்ர்...