எனக்கும் அம்மா போல் கோலம் போட ஆசை.
இம்முறை அம்மா எனக்கு வண்ணங்கள் தீட்டக் கற்றுக்கொடுத்தாள்.
நீலம், பச்சை, ஊதா, காவி என ஏராளமான வண்ணப் பொடிகள் இருந்தன.
எதை எடுப்பது?
வானத்தைப் பார்த்து நீல நிறம் எடுத்தேன்
எனக்கு மிகவும் பிடித்த மாம்பழத்தை பார்த்து மஞ்சள் நிறம் எடுத்தேன்
பச்சை இலைகள் நிற வண்ணம் தீட்டினேன்
சிகப்பான அழகியத் தக்காளி வண்ணமும் தீட்டினேன்
அம்மா!!! இங்கே வா. சீக்கிரம் வா. நான் செய்ததை வந்து பாரு.
அம்மா மிகவும் சந்தோஷமாக என்னை கட்டி அனைத்தாள்
வண்ணங்கள் தீட்டுவது எனக்கு மிகவும் பிடித்ததிருக்கிறது!!!