coronavirus nammaal paadhukaapaaga irukka mudiyum

கொரோனா வைரஸ்: நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும்

கொரோனா வைரஸ் தொற்று எனும் பேரிடரில் நாம் எவ்வாறு புத்திசாலியாக செயல்பட்டு, பாதுகாப்பாக இருந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

- Tamil Montessori

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கொரோனா வைரஸ் மற்றும் கொவிட்-19

"ஒரு மிகப்பெரிய நோய்க்கிருமி குடும்பத்தைச் சார்ந்த கொரோனா வைரஸ்கள் விலங்குகளிலும் மனிதர்களிலும் உடல்நலக்குறைவை ஏற்படுத்தலாம். பல கொரோனா வைரஸ்களால் மனிதர்களில் சாதாரண சளியிலிருந்து கொடிய நோய்கள் வரை பல சுவாச தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் தொற்று நோய் தான் கொவிட்-19."

உலக சுகாதார அமைப்பு

பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாவும் இருத்தல்

கொவிட்-19 நம்மில் பலரை பாதிக்கின்றது.  ஆனால் நாம் பாதுகாப்பாக இருக்க, மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதார நிபுணர்களும், அத்தியாவசிய சேவை வழங்குநர்களும் அயராது உழைக்கின்றனர். இது ஒரு கடினமான நேரம்; நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம். இப்போது உங்கள் நண்பர்கள் சிலர் உங்கள் ஆரோக்கியத்திற்கும், பிறருக்கு உதவி செய்வதற்குமான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ள போகிறார்கள். புத்திசாலியாக செயல்படுங்கள், பாதுகாப்பாக இருங்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்.

சந்தேகங்களுக்கு உலக சுகாதார அமைப்பை அணுகுங்கள்

நன்றி அனிர்பன் மஹாபத்ரா, டாக்டர் என்.எஸ்.பிரஷாந்த், ஷாம்பவி நாயக், டாக்டர் டானியா சேஷாத்ரி https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019

அம்மச்சியின் அற்புதமான ஆலோசனை

எழுத்து மற்றும் சித்திரம் ராஜீவ் ஐய்ப்

சூரஜும் நானும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம். நீங்களும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம், குறிப்பாக உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால்.

நம்மில் ஒருவருக்குக் காய்ச்சல்,  இருமல் , மூச்சுத் திணரல் இருந்தால், முதலில் நம் மருத்துவர் அல்லது அரசு உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு அவர்கள் அறிவுறுத்தலைப் பின்பற்றுவோம். ஒரு மருத்துவரால் மட்டுமே நமக்கு கொவிட்-19 இருக்கிறதா என்பதைக் கூற முடியும்.

எனக்கு நேற்று உடம்பு சரியில்லை, ஏனென்றால் நான் நிறைய உண்ணியப்பம் தின்றேன்.

ஏன் நீமா இன்று "ஹாப்பி பர்த்‌டே" பாடுகிறாள்?

எழுத்து பீஜல் வச்சரஜனி

சித்திரம் பிரியா குரியன்

கொரோனா வைரஸால் எல்லாரும் பயத்துடனும் குழப்பத்துடனும் இருக்கிற இவ்வேளையில் நீமா எப்படி கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்கிறாள்?

அவள் தன் கைகளை இருபது வினாடிகளுக்குத் தவறாமல் கழுவி, "ஹாப்பி பர்த்‌டே" பாட்டை இருமுறை பாடுகிறாள்.

"ஹாப்பி பர்த்‌டே டூ மீ,

ஹாப்பி பர்த்‌டே டூ மீ,

ஹாப்பி பர்த்‌டே டியர் நீமா,

ஹாப்பி பர்த்‌டே டூ மீ!

ஹாப்பி பர்த்‌டே டூ மீ,

ஹாப்பி பர்த்‌டே டூ மீ,

ஹாப்பி பர்த்‌டே டியர் நீமா,

ஹாப்பி பர்த்‌டே டூ மீ!"

உமா எதிராக வைரஸ்

எழுத்து மீரா கணபதி

சித்திரம் ரேணுகா  ராஜீவ்

உங்களுக்கு இருமல் அல்லது தும்மல் வரும்போது

தயவு செய்து ஒரு டிஷூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்.

டிஷூ இல்லை என்றால்,

உடனே உங்கள் முழங்கையைக் கொண்டு

உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடுங்கள்.

பாருங்கள்? நான் என் புருவங்களால் சிரிக்க முடியும்.

ஃபரிடாவின் திட்டம்

எழுத்து மேகன் டாப்ஸன்-ஸிப்பி

சித்திரம் ஜயேஷ் சிவன்

காலை, மதியம் மற்றும் இரவில் ஃபரிடாவின் கைகள் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கின்றன. காலையில், அவள் ஜன்னலின் அடிக்கட்டைக்கு வரும் சிட்டுக் குருவிகளுக்கும் கிளிகளுக்கும் விதைகளைப் பகிர்கிறாள். சீப் சீப் சீப்!

"நாம் நமது முகத்தைத் தொடாமல் இருந்தால், கிருமி நம் கைகளிலிருந்து உடம்பிற்குள் புக முடியாது, ஆகவே காய்ச்சலும் வராது என்பதை மறக்க கூடாது!" என்று அம்மாவிடம் கூறுகிறாள்.

அண்ணாவை யார் சிரிக்க வைத்தார்?

எழுத்து சஞ்சனா கப்பூர்

சித்திரம் சுனைநா கொயலோ

அண்ணன் தனிமையில்  இருப்பதாக நினைக்கிறார். இவ்வுலகம் ஆபத்தானது என எல்லோரும் கூறுகின்றனர். அண்ணனின் அசுர நண்பன் டுக்டுக் பெரியதாகிக் கொண்டே போகிறது; அத்துடன் அவரது சிரிப்பையும் விழுங்கிவிட்டது.

வீட்டில் அண்ணன் அப்பா அம்மாவுடன் பேசுகிறார். மற்றும் தங்கையுடன் விளையாடுகிறார். அவர் இனி தனியாக இல்லை. அண்ணன் வீட்டிற்குள் தான் அடைந்து கிடக்கிறார் என்ற எண்ணம் தேவையற்றது என்று உணர்கிறார்.

மீராவும் அமீராவும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனர்

எழுத்து நிம்மி சாக்கோ

சித்திரம் லாவண்யா நாயுடு

"அமீரா, கேட்டியா? ஒரு நோய்க்கிருமி இப்பொழுது பரவிக் கொண்டிருக்கிறது! அது மக்களைக் கொடிய நோய்க்கு ஆழ்படுத்துகிறது", என்று தன் கற்பனைத் தோழியிடம் கூறினாள்.

அச்சூ! கவ்-கவ்!

"ஐயோ! அவர்களை அந்த நோய்க்கிருமி பாதித்துள்ளது போல, மீரா", என்றாள் அமீரா. "ஆமாம், யாராவது தும்மும் பொழுதோ அல்லது இருமும் பொழுதோ அவர்களின் அருகில் நாம் இருந்தால், அந்த நோய்க்கிருமி நம்மைத் தொற்றலாம், பிறகு வேறொருவருக்குப் பரவலாம்!"

"அப்போ நாம் என்ன செய்ய வேண்டும்?"

"நாம் விலகி இருக்க வேண்டும். குறைந்தது ஆறு அடி தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்."

"நல்ல வேளை நமது காகிதக் கப்பல் நாம் பயணிக்க தயாராக இருக்கிறது!!"

நானி வீட்டில் இருக்கிறார்

எழுத்து மற்றும் சித்திரம் தீபா பல்ஸாவர்

இது வெளியே சுற்றித் திரியும் நேரம் அல்ல.

நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்றார் நானி.

வேறொரு நாள் பூங்காவுக்குச் செல்லலாம்.

இப்போதைக்கு வீட்டிற்குள்ளேயே இருங்கள்.

நானி அவர்களின் நண்பர்களிடம் கூறினார் "சரியானதைச் செய்யுங்கள். இரவும், பகலும் வீட்டிற்குள் இருங்கள். முடிந்தால் நல்லதை செய்யுங்கள். பலருக்கு உதவி தேவைப்படுகிறது."