கிரிக்கெட் வேண்டுதல்
Rajam Anand
இன்று கிரிக்கெட் மேட்ச் இருக்கிறது. என் குடும்பத்தினர் எல்லாரும் நம் அணி வெல்ல வேண்டுமென வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆட்டக்காரர்கள் கிரீஸில் நிற்கவேண்டும், நன்றாக விளையாடவேண்டும், இதற்கெல்லாம் நிறைய பயிற்சி தேவை. எல்லோரும் தயாராக இருக்கவேண்டும். நான் பயிற்சி தேவையென்று சொன்னது ஆட்டக்காரர்களுக்கு இல்லை, என் வீட்டில் இருப்பவர்களுக்கு!