அய்மெனுக்கு இயந்திரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.அவளுக்கு அவற்றைப் பார்க்கப் பிடிக்கும். அவற்றை வரையப் பிடிக்கும். அவற்றைப் பற்றிப் படிக்கவும் பிடிக்கும்.
“நீ ஒரு இயந்திரமாகவே மாறிவிட்டாயே!” என்றார் அவளது தாத்தா.“நான் மனிதன் பாதி, இயந்திரம் பாதி” என்றாள் அய்மென்.
“நான் ஒரு சைபார்க், தாத்தா!”
“சைபார்க் என்றால் என்ன?”
“Cybernetic Organism என்பதன் சுருக்கம்தான் Cyborg - சைபார்க். இது, நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை உறுப்புகள் கொண்ட ஒரு உயிரினம்.”
மனிதர்களால் செயற்கை உடலுறுப்புகளை வைத்துக்கொண்டு எப்படி செயல்படமுடியும் என்று தெரிந்துகொள்ள தாத்தா ஆர்வமாக இருந்தார்.
“உயிர் மின்னியல்-அதாவது பயோனிக்ஸ்-விஞ்ஞானிகள், மனித உடலின் உறுப்புகள் இயங்கும் விதத்தை ஆய்வுசெய்து, அவற்றைப் போலவே இயங்கும் இயந்திரங்களை வடிவமைக்கிறார்கள்.
செயல்பட முடியாத உறுப்புகளுக்கு மாற்றாகவோசெயலிழந்த நிலையில் உள்ளவற்றுக்கு ஆதரவளிப்பதற்காகவோ இந்த உயிர் மின்னியல் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன” என்றாள் அய்மென்.
அய்மென் மனித உடலின் வரைபடம் ஒன்றை தாத்தாவுக்குக் காண்பித்தாள். “சில உயிர் மின்னியல் சாதனங்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்றாள்.
தாத்தாவும் இது போன்ற சில சாதனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்.
சிறுநீரகம் செயல்படாமல் இருப்பவர்களுக்காக இரத்தத்தை சுத்தீகரிக்க டயாலிசிஸ் இயந்திரம் உதவுகிறது.
இதயம் சீரான தாளத்தில் துடிக்கவும் இரத்தத்தைச்செலுத்தவும் பேஸ்மேக்கர் கருவி உதவுகிறது.
தாத்தா இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினார்.
“இந்த பயோனிக்ஸ் என்னை இன்னும் வலிமையாக ஆக்குமா?” என்று அவர் கேட்டார்.“இது எனக்கு பறவையைப்போல பறக்கவும் சிறுத்தையைப்போல ஓடவும் உதவுமா, என்ன?”
“இல்லை, தாத்தா!” என்று அய்மென் சிரித்தாள். “ஆனால், கைகளையோ கால்களையோ இழந்துவிட்டால் அவற்றுக்குப் பதிலாக மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய பயோனிக்ஸ் உறுப்புகளைப் பொருத்திக் கொள்ளலாம்.”
“ஒருவேளை நான் என் பார்வையை இழந்துவிட்டால்? குரலை?
கேட்கும் சக்தியையோ சுவைக்கும் திறனையோ இழந்துவிட்டால்?”
என்று கேட்டார் தாத்தா.
அதற்கும் அய்மெனிடம் பதில்கள் இருந்தன:
ஒரு பயோனிக் காதுக் கருவி மூலம் தாத்தா அவருக்கு விருப்பமான வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும்!
ஒரு பயோனிக் குரல் பெட்டி மூலம் அதன் கூடவே பாட முடியும்!
பயோனிக் கண்களின் உதவியால் சந்தையில் நல்ல பழங்களாகப் பார்த்து வாங்கமுடியும்!
ஒரு பயோனிக் நாக்கு அந்தப் பழங்களை ருசிக்க உதவும்!
“ஆனால், இன்னமும் இயந்திர மாற்று கண்டுபிடிக்கப்படாத உறுப்புகளும் உள்ளன” என்றாள் அய்மென்.
நம் மூக்கு 10,000 வாசனைகள் வரை உணர்ந்து மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புவதால் அவற்றை நம்மால் அடையாளம் காணமுடிகிறது. அதே திறனோடு ஒரு இயந்திர மூக்கை உருவாக்க இன்னும் சில காலம் ஆகும்.
“பயோனிக்ஸ் துறை நிறைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.மனித உடலையும் மாற்றி வருகிறது.
தாத்தா கேட்டார், “அய்மென், நான்…
தாத்தா! ஒருநாள் நாம் அனைவருமே கூட சைபார்க் ஆகலாம்” என்றாள் அய்மென்.
….ஏற்கனவே சைபார்க்தானா?”
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இல்லை, தாத்தா ஒரு சைபார்க் அல்ல!
மூளை மற்றும் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படும் இயந்திரங்கள் அல்ல பொய்ப்பற்கள்.
சைபார்க் எனக் கருதப்படக் கூடிய சிலர் இங்கே:
ஓவியர் நீல் ஹார்பிசன், பிறக்கும்போதே தீவிர நிறக்குருடு அல்லது அக்ரோமாடோப்சியாவுடன் பிறந்தார். ஆனால், இப்போது மற்ற மனிதர்களால் கற்பனைகூட செய்ய முடியாத வண்ணங்களை அவரால் கேட்க முடியும்! அவரது மண்டையோட்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு ஆண்டனா, ஒலி மற்றும் அதிர்வுகள் வழியாக வண்ணங்களை உணர அவருக்கு உதவுகிறது. அந்த ஆண்டனாவை வைத்து அவரால் இணையத் தொடர்பு கொள்ளவும் முடியும்.
எமிலி போர்கார்ட் தீவிர வலிப்பு நோயால் அவதிப்பட்டவர். 2013ஆம் ஆண்டு, அவரது மூளையுடன் பொருத்தப்பட்ட ஒரு சிறிய கணினி அவர் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.