dar bur

டர் புர்

டமால் டுமீல் என்றோ, கமுக்கமாகவோ, எல்லாருமே டர் புர் என விடத்தான் செய்கிறார்கள். திடீரென்று, இல்லை அடக்கிவைத்து, வெளியே விடுவதின் ஆனந்தமும் எல்லோருக்கும் தெரியும்தான். வாருங்கள், குசு பற்றிய இந்த சூப்பரான கவிதையைப் படிக்கலாம்.

- Irulneeki Ganesan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சில சமயம் கூடவே வரும்

சில சமயம் கைகோர்த்து வரும்

சில சமயம் பலமா கர்ஜனையுடன் வரும்

சில சமயம் திருடன் போல புசுக்கென்று வரும்

பூம் என்று சங்க நாதமாய் ஒலிக்கும்

காற்றில் கலந்து நாறித் தொலைக்கும்

முட்டமுட்டச் சாப்பிட்டு வயிறு வலிக்கும்

டர் புர் என்று வெளியேறி சலிக்கும்

வாயுவுக்காக வெட்கப்படாதே, தம்பி!

விடு டர் டர், புர் புர்.

உண்மையைச் சொல்! யோசித்துச் சொல்!

தினமும் நீ விடுவதில்லையா டர் புர்?