தம்-தம்-த-தம் பிரியாணி!
N. Chokkan
பாஷாவுக்கும் சாய்நபிக்கும் ஒரு பெரிய சவால்: பிரியாணி சமைக்கவேண்டும், அதுவும் 24 பேருக்கு. அவர்களுடைய அம்மி பிரியாணி சமைப்பதில் நிபுணர். ஆனால், இன்றைக்கு அவருக்கு உடல்நலம் சரியில்லை. இந்த நேரம் பார்த்து சாய்ரா அத்தை 23 விருந்தினர்களை அழைத்துக்கொண்டு சாப்பிட வருகிறாராம்! பாஷா நன்றாக சமைப்பான். அவனுக்கு அம்மியின் தம் பிரியாணி செய்முறை தெரியும்.ஆனால், அந்தச் செய்முறையை வைத்து நான்கு பேருக்குத்தான் பிரியாணி செய்ய இயலும். ஆகவே, கணிதப்புலியான சாய்நபி அவனுக்கு உதவுகிறாள். 4 பேருக்கான செய்முறையை 24 பேருக்கான செய்முறையாக மாற்றித்தருகிறாள். அதன்பிறகு என்ன ஆனது? சகோதரனும் சகோதரியும் சேர்ந்து இருபத்து நான்கு பேருக்கு தம்-தம்-த-தம் பிரியாணி செய்தார்களா? இந்தப் புத்தகத்தை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.