eliyum eliyum

எலியும் எலியும்

எலிக்குஞ்சு ஒன்று உலாவிக் கொண்டிருந்தது. அப்போது அந்த எலிக்குஞ்சு இன்னும் ஒரு எலியை சந்தித்தது. அந்த எலியோ புதுமையான எலி! அப்படி என்ன புதுமை? வாருங்கள் பார்ப்போம் அது யார் என்று?

- Aruna Keerthi Gamage

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

‘ம்... ம்... சுவையான உணவு...’

“ஆ... ஆ... யார்... அது? ... எனக்கு வலிக்கின்றதே ...”

நீங்கள் யார்? .......நான் ‘மவுஸ்’

‘மவுஸ்’ என்றால்?

‘மவுஸ்’ என்றால் எலிதான்..!

ஓகோ... நீங்களும்

எலியோ?

உங்களால் என்ன முடியும்?

இதோ பாருங்கள் எங்கள் விளையாட்டை...

இப்படியொரு ‘கேக்’ உங்களிடம் இருக்கின்றதா...

அச்சோ எலிக்குஞ்சே..!

இதோ இதையும் பாருங்கள்...

இருந்தாலும் எங்களைப் போல் வேலை செய்ய முடியாதே...

“பார்த்தீரா... இந்த பென்சிலுக்கு நடந்ததை? அப்படித்தான் நாங்கள்.”

எங்களாலும் முடியுமே...

இதோ பாருங்கள்...

நல்லது... எங்களைப் போல நடனம் ஆட முடியுமா?

அம்மோய்... என் கதை முடிந்தது...

“வா... வா எலிக் குஞ்சே... இந்தப் பக்கமாய் வா...’’

“...வவ் வவ்...’’ மவுஸ் உருவாக்கிய நாய் குரைத்தது. பூனை ஓடிப்போனது.

அப்பாடா தப்பினோம்...

“நன்றி மவுஸ்! நீங்களும் எங்களைப் போன்று கெட்டிக்கார எலிதான்...’’