ellam punaiyal vantha vinai

எல்லாம் பூனையால் வந்த வினை

வினய் வீட்டுப்பாடம் செய்யாதது ஏன் ? பூனை செய்த சேட்டை என்ன ? குரங்கு தந்த தொல்லை என்ன ? நாய் தின்ற பண்டம் என்ன?

- Manickavasagam Deivanayagam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நீ ஏன் உன் வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை வினய் மேடம் எல்லாம் அந்தப் பூனையால் வந்த வினை

சேட்டைக்காரப் பூனை ஒன்று மரத்தில் ஏறி மாட்டிக்கொண்டது  மியாவ்...மியாவ்... மியாவ்...

உயரமான ஏணி உடைந்து கிடக்கச் சரி செய்யப் போனேன். மியாவ்...மியாவ்... மியாவ்...

ஏணி சரி செய்ய ஆணி அடிக்கக் சத்தம் கேட்டு குழந்தை அழுதது. தட்... தட்... தட்....வீல்... வீல்... வீல்...

குழந்தை அழுகுரல் கேட்டு அம்மா ஓடினாள் சமையலறை விட்டு.   வீல்... வீல்... வீல்...

பசித்த குரங்கு ஒன்று தைரியம் பெற்றுச் சமையலறையில் நுழைந்தது. ஷ் ... ஷ் ..ஷ்...

குரங்கு தின்று தீர்த்தது உணவை.   ஏவ்...ஏவ்...ஏவ்...

சப்பாத்தி, சிக்கன் கறி வாங்க அப்பா போனார் கடைக்கு. கொக்கரக்கோ...கொக்கரக்கோ...கொக்கரக்கோ...

சிக்கன் வாசம் பிடித்த நாய் வந்தது வீடு வரை.   லொள்... லொள்... லொள்...

பசித்த நாய் என் சொல் கேட்காமல் தின்று சென்றது வீட்டுப்பாடத்தை. லொள்... லொள்... லொள்...

என்ன நாய் வீட்டுப்பாடத்தை தின்றுவிட்டதா ?

எல்லாம் பூனையால் வந்த வினை.  மியாவ்வ்வ்வ்வ்