embi kudhitha pandhu

எம்பிக் குதித்த பந்து!

கயல் பந்தை அதிகமாக மேலே எழும்புமாறு வீசிவிட்டாள். அதைப் பிடிக்க உதவிய அக்கம்பக்கத்தில் இருந்த பலரையும் எண்களை எண்ண உதவும் இப்புத்தகத்தில் சந்திக்கலாம் வாருங்கள்!

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

உய்ங்!

கயல் பந்தைத் தரையில் வேகமாக

எறிந்ததால் அது கொஞ்சம்

அதிகமாகவே மேலே எம்பிப் பறந்தது.

பூங்காவில் இருந்த யாராலும்

அதைப் பிடிக்க முடியவில்லை.

சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்த

ஒருவரைத் தாண்டிச் சென்றது பந்து.

வேலையில் மும்முரமாக இருந்த அவரால் பந்தைப்

பிடிக்க முடியவில்லை.

தள்ளாடியபடி தேநீர் விற்றுக் கொண்டிருந்த

இரண்டு பேரைத் தாண்டிச் சென்றது பந்து.

திண்டாடிக் கொண்டிருந்த அவர்களால் பந்தைப்

பிடிக்க முடியவில்லை.

குழப்பத்திலிருந்த மூன்று பாதுகாவலர்களைத்

தாண்டிச் சென்றது பந்து.

அதிக குழப்பத்தில் இருந்த அவர்களால் பந்தைப்

பிடிக்க முடியவில்லை.

மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் நான்கு பேரைத் தாண்டிச் சென்றது பந்து.

அதிக பரபரப்பில் இருந்த அவர்களால் பந்தைப்

பிடிக்க முடியவில்லை.

வேர்வையில் நனைந்திருந்த ஐந்து தோட்டக்காரர்களைத் தாண்டிச் சென்றது பந்து.

அதிகமாக வேர்த்து வழிந்ததால், அவர்களால் பந்தைப்

பிடிக்க முடியவில்லை.

மெதுவாக ஓடிக்கொண்டிருந்த ஆறு பேரைத் தாண்டிச் சென்றது பந்து.

களைத்துப் போயிருந்த அவர்களால்  பந்தைப்

பிடிக்க முடியவில்லை.

அரட்டை அடித்துக் கொண்டிருந்த பூக்காரர்கள்

ஏழு பேரைத் தாண்டிச் சென்றது பந்து.

பேச்சு சுவாரசியத்தில் இருந்த

அவர்களால் பந்தைப் பிடிக்க

முடியவில்லை.

பயத்துடன் தவித்துக் கொண்டிருந்த மின்

ஊழியர்கள் எட்டு பேரைத் தாண்டிச் சென்றது பந்து.

அதிக பயத்தில் இருந்த அவர்களால் பந்தைப்

பிடிக்க முடியவில்லை.

இளைப்பாறிக் கொண்டிருந்த அப்பளம் தயாரிப்பவர்கள் ஒன்பது பேரைத் தாண்டிச் சென்றது பந்து.

மிகவும் ஓய்வாக இருந்த அவர்களால் பந்தைப்

பிடிக்க முடியவில்லை.

வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த  பத்து பேரைத் திகைப்பில் ஆழ்த்திவிட்டுத் தாண்டிச் சென்றது பந்து.

திகைத்துப் போன அவர்களாலும் பந்தைப்

பிடிக்க முடியவில்லை.

உய்ங்!