எங்களைப் போலவே நாளும்
எங்கள் குட்டி செடிகளும் வளர்கின்றனவே !
நாளும் நாங்கள் நீரூற்ற
எங்களைப் பார்த்து தலையசைக்கின்றனவே !
வண்ண வண்ண மலர்களால்
மனங்களை எல்லாம் கவர்கின்றனவே !
சத்தான காய்கனிகளையும் வழங்கியே
உடலுக்கு பலமளிக்கின்றனவே !
குட்டி குட்டி பூச்சிகளுக்கெலாம்
வீடாகிப் போனதே எங்கள் வண்ண தோட்டமே !
வாருங்களேன் எங்கள் குட்டி தோட்டத்திற்கு !
எங்கள் தோட்டத்து உறவுகளுடன்
விளையாடி மகிழ்ந்திடவே !