என் சிவப்பு டீஷர்ட்
Vetri | வெற்றி
அமனுக்கு தன் சிவப்பு டி-ஷர்ட்டை ரொம்பப் பிடிக்கும். அது எவ்வளவு பளிச்சென்று, மெத்தென்று இருக்கும் தெரியுமா. ஆனால் அவன் அம்மாவுக்கு அதை சுத்தமாகப் பிடிக்காது. அது எவ்வளவு பழசாக, ஓட்டை ஓட்டையாக இருக்கும் தெரியுமா. அதைத் தூக்கி எறிந்துவிடலாமென்று அம்மா சொல்கிறார். அமன் அதை வைத்துக் கொள்ள விரும்புகிறான். இப்போது அமன் என்ன செய்யப்போகிறான்?