நேற்று இரவு, மிகவும் கடினமாக மழை பெய்தது, ஆற்றின் கரைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.
கிராம மக்கள் உற்சாகமடைந்து மீன்பிடிக்கத் தொடங்கினர்!
தாவோ தாங் ஒரு கொக்கி மற்றும் கயிறுடன், ஒரு பெரிய கோடிட்ட பாம்புத் தலை மீனைப் பிடித்தார்.
நாங் கம்பாய் ஒரு மீன்பிடி கூண்டை பயன்படுத்தி ஒரு கெண்டை மீனை பிடித்தார்.
நாங் பூவாகோவின் மீன்பிடி வலையில் இறால் பிடிபட்டது.
தாத்தா பவுன் ஒரு ஆசிய சிவப்பு வால் பூனைமீனை பிடிக்க ஒரு வார்ப்பு வலையைப் பயன்படுத்தினார்.
தாவோ கூட் செவுள் வலைகளை பயன்படுத்தி மண் நண்டுகளைப் பிடித்தார்.
பாட்டி பெங் துாக்கு வலைகளை பயன்படுத்தி கெண்டை மீன்களைப் பிடித்தார்
மாமா காம்பியூ ஒரு பொறியைப் பயன்படுத்தி கெளுத்தி மீனைப் பிடித்தார்.
அத்தை கம்சௌக் சுழற்று முறையில் மீன்பிடிக்கச் சென்று ஒரு பரந்த தலை கெளுத்தி மீனைப் பிடித்தார்.
தாவோ சோ ஒரு கம்பம் மற்றும் கயிறு பயன்படுத்தி ஒரு பாசா மீனைப் பிடித்தார்.
மதியம், கிராமவாசிகள் தங்கள் பிடிப்பை ரசித்தனர்.
அவர்கள் எல்லா மீன்களையும் சமைத்து ஆற்றின் அருகே மதிய உணவை சாப்பிட்டார்கள்.