அம்மாவுக்கு அன்று விடுமுறை. அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அனிலுக்கும் அன்று விடுமுறை. அவன் ஏதாவது.... செய்ய விரும்பினான்!
"அம்மா, அந்த நீல பெட்டியில் என்ன இருக்கிறது என்று நான் பார்க்கணும்," என்றான் அனில். "சிறிது நேரத்திற்கு பிறகு, அனில்," என்றார் அம்மா.
அனில் நாற்காலி மீது ஸ்டூல் ஒன்றை போட்டான். அவன் மேலே ஏறி பெட்டியை எடுக்க முயன்றான்.
"வேண்டாம்! வேண்டாம்! அதை எடுக்காதே! அதற்கு மேல் இருக்கும் எல்லா பெட்டிகளும் நம் தலையில் விழும், அனில்," என்றார் அம்மா.
அனிலுக்கு ரொம்ப கோபம் வந்தது.
அவனுக்கு அம்மாவின் மீது கோபம்.
"வா, நாம் கடைக்குப் போய் உனக்கு ஏதாவது வாங்கலாம்," என்றார் அம்மா.
கடைக்குச் சென்ற பின்பும் அனிலுக்கு ரொம்ப கோபம்.
ஒரு ஆரஞ்சு பழத்தைக் காட்டி, "எனக்கு அது வேண்டும்," என்றான் அனில்.
"இல்லை, இல்லை, அந்த பழம் கிடையாது! எல்லா பழங்களும் கீழே விழும்!" என்றார் கடைக்காரர்.
"எனக்கு அந்த புத்தகம் வேண்டும்," என்றான் அனில்.
"இல்லை, இல்லை, அந்த புத்தகம் கிடையாது!"என்றார் கடைக்காரர். "இதை எடுத்துக்கொள்."
"எனக்கு அது வேண்டும்!" என்று கத்தி, உயரமாக அடுக்கியிருந்த சமோசாக்களிலிருந்து ஒன்றை எடுக்க இருந்தான்.
"இல்லை, இல்லை, அது வேண்டாம்!" என்றார் கடைக்காரர். "என் சமோசாக்கள் எல்லாம் கீழே விழுந்துவிடும்!"
தற்ச்சமயம் அனில் பலமாக அழுதுகொண்டிருந்தான்.
எல்லோரும் அனிலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
"எனக்கு அது வேண்டும்! அந்த கருப்பு நிறத்தில் இருப்பது," என்று அம்மா பலமாகக் கூறினார்.
அனில் திடீரென்று அழுகையை நிறுத்தினான். "அம்மா, இல்லை, இல்லை, அது இல்லை!" என்றான் அனில்.