என் அம்மாவின் பெயர் லீ. அவர் எப்பொழுதும் கடினமாக உழைப்பவர்.
நான் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்!
என் அம்மா சமைக்கும் பொழுது, நான் சமைக்க கற்றுக்கொள்கிறேன் .
அவர் பூக்களுக்கு நீர் பாய்ச்சும் பொழுது,
நான் பூக்களுக்கு நீர் பாய்ச்சவும் கற்றுக்கொள்கிறேன்.
அவர் எங்கள் துணிகளைத் துவைக்கும் பொழுது, நான் எங்கள் துணிகளைத் துவைக்கவும் கற்றுக்கொள்கிறேன்.
அவர் எங்கள் துணிகளை உளர்த்தும் பொழுது, நான் எங்கள் துணிகளை உளர்த்தவும் கற்றுக்கொள்கிறேன்.
என் அம்மா எனக்கு ஒரு மிதிவண்டி வாங்கித் தந்து, அவர் அதை எப்படி ஓட்ட வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார்.
நான் என் மிதிவண்டியை
மகிழ்ச்சியாக ஓட்டும் பொழுது, என் அம்மா சிரிக்கிறார்.
இரவில், என் அம்மா
படுக்கையை விரிக்கும் பொழுது, நான் படுக்கை விரிக்கவும் கற்றுக்கொள்கிறேன்.
படுக்கைக்கு முன், என் அம்மா என்னிடம் கதைகள் சொல்கிறார்.
எனக்கு தூக்கம் வரும்பொழுது, என் அம்மா எனக்கு ஒரு தாலாட்டு பாடுகிறார்.
எனக்கு என் அம்மாவை மிகவும் பிடிக்கும்!