ப்ருகல்பாவிற்கு எண்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
அவை பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவுவதால், அவர் அவற்றை விரும்புகிறார்.
எண்கள் வடிவங்களையும் கதைகளையும் உருவாக்க உதவுகின்றன.
மக்களை இணைக்கின்றன.
மக்களுக்கு அதிகாரம் தருகின்றன.
தன் நண்பர் வருணுடன் இணைந்து துவக்கிய சோஷியல்காப்ஸ் என்னும் நிறுவனத்தில் அவர் இப்பணியைத்தான் செய்து வருகிறார்.
ப்ருகல்பாவிற்கு மனிதர்களின் தகவல்களைக் குறிக்கும் எண்கள் என்றால் மிகவும் விருப்பம். இவற்றை தரவு அல்லது ‘டேட்டா’ என்கிறோம்.
இக்காலத்தில் தங்கத்தைவிடவும் பெட்ரோலைவிடவும் தரவுகள் அதிக மதிப்பு வாய்ந்தவை என்கிறார்கள்.
ஏன் தெரியுமா?
சில எண்கள் அல்லது நிறைய நிறைய எண்கள், எப்படி உலகின் மிக விலையுயர்ந்த பொருட்களை விடவும் மதிப்புள்ளதாக ஆகின்றன?
உங்களையும் உங்கள் பள்ளியையுமே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
உங்களுக்கு வயிறு சரியில்லை. வாந்தியும் வயிற்றுவலியும் உங்களை ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளிக்குச் செல்ல முடியாதபடி செய்துவிட்டது.
உங்களுக்கும் உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும்தான் இதைப் பற்றிய கவலையெல்லாம்.
பிறருக்கு இதுவொன்றும் முக்கியமான தகவலில்லை என்றுதானே நினைக்கிறீர்கள்?
இது உங்களுக்கு மட்டும் நடக்காமல், உங்கள் வகுப்பிலிருக்கும் வேறு ஐந்து மாணவர்களுக்கும் அதே நாளில் உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தால்?
பெரும்பாலான சமயங்களில் உங்களுக்கு நடப்பது, நீங்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயமாக இருக்காது.
அவர்களும் அதே வயிற்றுவலியால் விடுப்பு எடுத்திருந்தால்?
இத்தகவல் உங்கள் பள்ளி முதல்வருக்குத் தெரியவந்தால், எப்படி ஒரே நாளில், ஒரே வகுப்பில் ஆறு பேரும் ஒரே பிரச்சினைக்கு ஆளாகினர் என யோசிப்பார்.
பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவாலா?
அல்லது பள்ளியில் மாணவர்கள் குடித்த தண்ணீராலா?
இப்படித்தான் குழுக்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் உதவும்.
உங்கள் வகுப்புத் தோழர்களைப் பற்றிய தகவல்களை ஓரிடத்தில் சேமிக்கும்போது அது சமூகத் தரவாகிறது. தொடர்புடைய குழுக்களைச் சேர்ந்தவர்களின் கூட்டுத் தகவல்களை சமூகத் தரவு என்கிறோம். உங்களுடைய மற்றும் உங்கள் வகுப்பு மாணவர்களின் தகவல்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இத்தரவுகள் ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்படுபவை. இச்செயல்பாட்டை
crowdsourcing அதாவது மக்களின் பங்கேற்பில் செய்யப்படுபவை என்கிறோம்.
ப்ருகல்பா இப்படித்தான் எண்களை, அதாவது தரவுகளை சேகரிக்கிறார். அவற்றைக் கொண்டு பலரது வாழ்க்கையை, பள்ளிகளை, நகரங்களை
சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறார்.
5 கோடி பெண்கள்
13 மாநிலங்கள், 640 மாவட்டங்கள்
50,000 கள மெக்கானிக்குகள், 3 எண்ணெய் நிறுவனங்கள், 10,000 LPG எரிவாயு விநியோக மையங்கள்
பயனடைந்தோர்
பகுதிகள்
பிற வளங்கள்
3 ஆண்டுகளில் மாசற்ற எரிவாயு
ப்ருகல்பாவும் அவரது குழுவினரும் முதல் 11 மாதங்களிலேயே 2.7 கோடி LPG இணைப்புகளை வழங்க உதவினர்.
கணினி மற்றும் இணைய அறிமுகம்
1 கோடி பெண்கள்
12 மாநிலங்கள், 1 லட்சம் கிராமங்கள்
பயனடைந்தோர்
பகுதிகள்
கிருமிநாசினி சோப்புகள் பயன்பாட்டின் மூலம் சுகாதாரம்
மற்றும் துப்புரவு மேம்பாடு
பகுதிகள்
பின்தொடரப்பட்ட நோய்கள்
822 உப மாவட்டங்கள்
260 வாரங்களுக்கு 20 நோய்கள்
ப்ருகல்பாவும் அவரது குழுவினரும் அரசு அதிகாரிகள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து எவ்வாறு தேவையான தகவல்களைப் பெற்று அதற்கேற்ற முடிவுகளை எடுக்கின்றனர்?
அவர்களது குழு, தரவுகளைச் சேகரிக்க கைபேசியில் ஒரு செயலியைப் பதியும். இதன் மூலம் உலகில் எந்த மூலையில் இருப்பவர்களின் தகவலையும் பெறுவது சாத்தியமாகிறது.
பொதுவாக, பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்படும் துண்டுத் தகவல்களைச் சேகரித்தால், மலைபோல் குவிந்துவிடும்.
பொருட்களை வசதியாக எடுத்தாள நமது மேஜையை நாம் ஒழுங்கமைத்து வைப்பதைப் போல, ப்ருகல்பாவின் குழு அந்தத் தகவல்களில் உள்ள தேவையற்ற தரவுகளை நீக்கி ஒழுங்கமைக்கிறது.
இதை எவ்வாறு செய்கின்றனர்?
திறன்வாய்ந்த கணினி அமைப்புகள் மற்றும் நிரல்களின் மூலம் வெவ்வேறு வகையான தரவுகளிடையே உள்ள தொடர்புகளைக் கண்டறிகின்றனர். கணினிகளின் துணையில்லாமல் இது சாத்தியமில்லை.
வரைபடங்கள், நிலப்படங்கள், கிராஃப்கள் போன்றவற்றையும் தரவுகளுக்கு இடையிலான தொடர்பைக் காட்ட பயன்படுத்துகிறார்கள். தரவு இப்போது கதைசொல்லத் தொடங்குகிறது. தொடர்புகள் புரிந்துகொள்ள எளிதாகின்றன.
ப்ருகல்பா தான் செய்வதை நேசிக்கிறார். தொழில்முனைவராக இருப்பதை விரும்புகிறார்.
ஆனால், ஒரு நிறுவனத்தை உருவாக்கி, நிர்வகிக்க தீவிர உழைப்பு வேண்டும். புறத்தொடர்புகள் குறைவான குக்கிராமங்களில், புதிய விசயங்களில் பெரிதாக ஆர்வம் செலுத்தாத அரசுத் துறைகளுடன் பணிபுரிந்து, பொது மக்களுக்கு தரவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்த அயராது செயல்பட வேண்டும்.
இன்னும் இந்தியாவின் பல பகுதிகளில் தகவல்கள் காகிதக்கட்டுகளாகத்தான் குவிகின்றன. அவை மின்னணு வடிவத்தில் இல்லாத காரணத்தால் அவற்றைக் கையாளுதலும் கடினமாகிறது. மேலும், இத்தகவல் சேகரிப்புப் பணியில் அரசின் வெவ்வேறு துறைகள் ஈடுபடுகின்றன. ஆனால், அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து இத்தகவல்களை ஓரிடத்தில் ஒருங்கிணைப்பதில்லை. எனவே, ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தரவுகளை ஒழுங்கமைத்தலே ப்ருகல்பாவின் குழுவினர் முன்னிருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
மாற்றம் என்பது ஒவ்வொரு தரவாக, ஒவ்வொரு நபராக உருவாக்கப்படும் மெதுவான, கடினமான ஒன்று என்பதையும் இப்பயணத்தில் அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு தொழில்முனைவராக பணியைத் தொடங்கியபோது இதைத்தான் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்திருந்தார். ஏதோ ஒரு பெருநிறுவனத்திற்காக மட்டும் தனது கணக்குத் திறமை பயன்படுவதை ப்ருகல்பா விரும்பவில்லை.
சிறப்பான முடிவுகளை எடுக்க உதவி, பலரது வாழ்க்கையை மேம்படுத்தும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது தரும் திருப்தியே ப்ருகல்பாவை தொடர்ந்து செயல்பட ஊக்குவிக்கிறது.
ப்ருகல்பாவும் அவரது குழுவினரும் உலகெங்கும் அரசுகள், வர்த்தக நிறுவனங்கள், கொடையாளர்கள் மற்றும் பிற தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
டொமினிக்கன் குடியரசு
அயர்லாந்து
யூஎஸ்ஏ
குவாதமாலா
கனடா
ஐவரி கோஸ்ட்
லைபீரியா
ஸ்பெயின்
ஜெர்மனி
தென்னாப்பிரிக்கா
ஜாம்பியா
மொசாம்பிக்கே
மலாவி
கென்யா
தென் கொரியா
இந்தோனேஷியா
பிலிப்பைன்ஸ்
சிங்கப்பூர்
மலேசியா
மியான்மர்
வியட்நாம்
பங்களாதேஷ்
இந்தியா
ஐக்கிய அரபு அமீரகம்
பப்புவா நியூ கினியா
இலங்கை