குறுக்கு கிரிஷ்
எண்ணங்கள் எண்ணியது குறுக்கு கிரிஷ்! கிரிஷ் எண்ணினான் குறுக்கு எண்ணங்கள்.
யார் இவர்கள்?
யார் இந்த பிராணிகள்? எடக்கு முடக்கான அம்சங்கள். வாத்தின் அலகு, நீர்நாயின் பாதங்கள். நீரெலி போல வாலு, அப்புறம் பல்லே இல்ல பாரு! மூன்று வாத்தலகிகள் இவர்கள் நீச்சல் நல்லா அடிப்பார்கள். கதை நல்லா இருந்தா கேட்பார்கள்.
மைக் டெஸ்டிங் ஹலோ ஹலோ
பரீட்சைக்கான பாடலை நான் பாடவா? கேள்வித்தாள் ரொம்ப நீளம் அல்லவா? பதில்கள் சரியோ தவறோ? டிங் டிங் டிங் டிங். பரீட்சை நேரம் முடிந்தது, பாடலும் கூட முடிந்தது!
பாம் பாம்
பாம் பாம் பாம் இதோ நான் கிளம்பிட்டேன்! இந்த நாயை முந்திகிட்டு போவேன், அந்த காக்காவ முந்திகிட்டு பறப்பேன். ஐயோ வேண்டாம்! ரோட்டுல ஒரே கூட்டமா இருக்கு, மெதுவாப் போறதுதான் நமக்கு நல்லது.
கொசுவோடு நேருக்கு நேர்
உய்ங்ங்ங்....உய்ங்ங்ங்... ஸ்வைங்ங் ஸ்வைங்ங் உய்ங்ங்ங்....உய்ங்ங்ங்... ஸ்வைங்ங் ஸ்வைங்ங் உய்ங்ங்ங்....உய்ங்ங்ங்... பட்!
பள்ளிக்கூடம் போகிறோம்
ஒரு விசித்திர பிராணி எங்க பள்ளிக்கூட வாத்தியாரு வால ஆட்டிக்கிட்டே கதை சொல்லுவாரு.பள்ளிக்கூடம் போறதுன்னா எங்களுக்குக் கொள்ளை இஷ்டம் போற வழியில திமிங்கலம் வந்தா ரொம்ப கஷ்டம்!
மழை இங்கே
பாட்டி எங்கே நிக்கிறாங்க? இங்கேதான் நிக்கிறாங்க. குடையை இறுக்கிப் பிடிச்சுகிட்டே ஹாய் சொல்லுறாங்க. மழை எங்கே பெய்யுது? இங்கேதான் பெய்யுது. ஐயோ! விரிக்க முடியலையே, இந்தக் குடையோட ஒரே குடைச்சல்!
இரண்டு ஒரே காண்டு
ஒண்ணு இல்ல இரண்டு தலை இருந்துச்சு, தூங்கப் போறதே தினம் பெரும்பாடா போச்சு. இடது தலை புரண்டு படுக்க வலது பக்கம் திரும்புச்சு, வலது தலை புரண்டு படுக்க இடது பக்கம் திரும்புச்சு, கிளுக்! திரும்பவும் சுளுக்கிடுச்சு!
நாங்க நாலு பேரு
நாலு யானைகளுக்கு இருந்தது யானை அளவுக்கு கவலைங்க, நாலு யானை மூக்கிலும் பானை அளவுக்கு பூட்டுங்க. தட்டி தடவி திருப்பி திருகி சாவி போட்டு பாத்துச்சு, கடைசியில காது கிழிய போட்ட தும்மல் சத்தத்துல திறந்துச்சு.
குவா குவா டிராகுவாத்து
குவா குவா கூவாவா பாட்டு உனக்கு கேட்டாக்கா, அது குவா குவா டிராகுவா வாத்துதான்னு தெரிஞ்சுக்கோ. கிளிக் கலுப் - கிளிக் கலுப் சத்தம் உனக்கு கேட்டாக்கா, பட்டுன்னு பாட்டு நின்னுடும் நீயும் தெரிஞ்சுக்கோ. நறுக்குன்னு நரிச் நரிச் சத்தம் உனக்கு கேட்டாக்கா, குவா குவா டிராகுவா வாத்து உன்னை கிள்ளுதுன்னு தெரிஞ்சுக்கோ.
துப்பறியும் பறவை
துப்பறியும் பறவை பாரு, அக்லூ அது பேரு. துப்பு ஒண்ணு தேடிப் போகுது பாரு. பாலாடை மொத்தமும் சாப்பிட்டது யாரு? பூனையா, எலியா இல்ல கங்காருவா?
குட்டி குட்டி கால்தடம் கூண்டுகிட்ட நிக்குது, பெக் பெக் சத்தம் உள்ளிருந்து கேக்குது. அட, திருடன் வேற யாருமில்ல, இந்த குஸ்ஸி கோழிதான்!
கத்தரி மூக்கன்
கத்தரி கிவி பறவைக்கு கோபமான மனநிலை. குறுக்க வரும் குஞ்சுகளும் பயந்து ஓடும் நிலை. பத்திரி கிவி கொடுத்தது கொஞ்சம் தானியம், இப்போ சண்டை போட நேரமில்ல. கரிச் முரிச்!
இங்கும் குப்பை, அங்கும் குப்பை. குவியல் குவியலா எங்கும் குப்பை, இத்தனையையும் அகற்ற நம்மால முடியுமா? யோசனையோட இருந்திருந்தா இந்தப் பிரச்சனை வந்திருக்குமா?
சுத்தம் செய்வோம் வாங்க
இசையே திறவுகோல்
இசைக்கலைஞன் இவன்தானே, இரசிகர் கூட்டம் இவனுக்கு அதிகம்தானே. தந்தானே தானே! இவன் சுருதி என்றும் தப்பாதே.