கால் முளைத்த தோல்
உருண்டு உருண்டு உருண்டு குப்பையிலே விழுந்தேன். புரண்டு புரண்டு புரண்டு மண்ணிலே விழுந்தேன். அடுத்து எங்கே போனேன்? மண் புழுவின் வயிற்றுக்குள்!
குட்டி முட்டை செம்மறி
குட்டி முட்டை செம்மறி, குணத்தில் நல்ல செம்மறி. எட்டி உயர குதிக்கவே முட்டி முட்டை உடஞ்சுதாம்.
குட்டி முட்டை செம்மறி, குணத்தில் நல்ல செம்மறி. குதித்து முட்டை உடைக்காமல் எட்டு வச்சு நடந்துச்சாம்.
கலூன் என்னும் பச்சோந்தி
கலூன் என்ற பச்சோந்தி, தன்னை பலூன் என்று நினைச்சுது. எம்பி எம்பி குதித்தே எளிதாய் நிலவுக்குப் போகுமாம்.
கலூன் என்ற பச்சோந்திக்குகடல் பயணம் பிடிக்குமாம். குதூகலமாய் நீந்தி நீந்தி திமிங்கலம் பார்க்கச் சென்றதாம்.
கடமுட சிங்கம்
காட்டுக்குள்ளே சிங்கம் ஒன்று கதை ஒண்ணு சொன்னது. கடமுட கடமுட சத்தம் எங்கிருந்து வந்தது? கதை சொன்ன சிங்கத்தின் வயிற்றில் இருந்து வந்தது. கதை கேட்ட சிங்கம் அங்கே கண்டுக்காமல் நின்றது.
ஐஸ்க்ரீம் குளம்
ஐஸ்க்ரீம் குளம், பிஸ்கட் படகு. குதிக்கும் சாக்லேட் தவளை, மிதக்கும் மிட்டாய் குவளை.
மின்கம்பிப் பறவைகள்
மின்கம்பிப் பறவைகள் பலவும் பலவிதம். பறக்கும் பறவைகள் ஒரு விதம் பாடும் பறவைகள் மறு விதம். பொய்புளுகிப் பறவை யாரு? அதோ தனியா நிக்குது பாரு.
சிக்கலோ சிக்கல்
சிக்கல் சிக்கல். கணக்கு, வாழ்க்கை, அறிவியல், தலைமுடியில் கூட சிக்கலோ சிக்கல். புத்திசாலித்தனமென்று மூட்டை கட்டி ஓடினேன். ஓடி ஓடிப் போனாலும் சிக்கலை அவிழ்த்துதானே ஆகணும்.
பிரானா
சஹானா எனும் அம்மணி பிரானா பிடிக்கப் போனார். போட்டார் பெரிய தூண்டிலை, மாட்டிக் கொண்டது மீன்தானா? சஹானா ஏமாந்து போனாரா?
பற பற
பட்டாம் பூச்சி பற பற. பகல் முழுக்க பற பற. பள பளன்னு பற பற.
டோடோ
க்ளக் க்ளக் ப்ளக் ப்ளக்! இரண்டு டோடோ குட்டையில் அசைந்து ஆடிப் போகுது. க்ளக் க்ளக் ப்ளக் ப்ளக்! தண்ணியை வாரி அடிக்குது, குட்டை குளம்பிப் போனது.
ஊர் சேவல்
பாட்டுக்கார சேவலுக்கு காய்ச்சலோ காய்ச்சலாம், வயிற்றில் கொஞ்சம் புரட்டலாம். பாட்டு கேட்க கூட்டம் கூட பயத்தில் அழுகை வந்ததாம். கொக்கரித்துப் பார்த்ததாம் கோளாறெல்லாம் போனதாம்.