என்ன நடக்கும்…
...நான் என் தொப்புளை அழுத்தினால்?
புஸ்ஸ்ஸ்! தட்டை சுனிதாவால் மூடியிருக்கும் கதவுக்கு அடியில் நழுவிச் செல்ல முடியும்.
நான் இந்த தக்காளி விதைகளை எல்லாம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? ஊஊஷ்ஷ்ஷ்! தக்காளிக் கொடிச் சிறுமி சுனிதாவை வந்து பாருங்கள்!
நான் மூச்சை ஆழ ஆழ இழுத்தால் என்ன நடக்கும்?
உப்ப்ப்ப்! நான் பலூன் சுனிதா! துள்ளி உருண்டு, துள்ளி உருண்டு. துள்ளி, துள்ளி. உருண்டு, உருண்டு.
நான் என் கண்களை இறுக்கமாக, மிக இறுக்கமாக, மிக மிக இறுக்கமாக மூடினால் என்ன நடக்கும்? அப்பப்பா! நான் யார் கண்ணுக்கும் தெரியாத சுனிதா! நான் இங்கிருப்பது யாருக்கும் தெரியாது.
நான் என் காதுகளை இழுத்து நீட்டினால் என்ன நடக்கும்? வீல்ல்ல்ல்ல்! நான் பறக்கும் சுனிதா. பறவைகளோடு உயரத்தில் சுற்றுவேன்.
ஆனால், உஷ்ஷ்! நீங்கள் யாரிடமும் தட்டை சுனிதா, தக்காளி கொடிச் சிறுமி, பலூன் சுனிதா, கண்ணுக்குத் தெரியாத சுனிதா, பறக்கும் சுனிதா பற்றியெல்லாம் சொல்லிவிடாதீர்கள்.
ஒரு நாள், என் சக்திகள் எல்லாம் என்னை சூப்பர் சுனிதாவாக மாற்றும். அப்போது நான் உலகத்தைக் காப்பாற்றுவேன்!