enna oru sattham

என்ன ஒரு சத்தம்

சிருங்கேரி ஸ்ரீனிவாஸ் ஒரு அன்பான விவசாயி. அவருக்கு நீளமான சிகை இருந்து. அவர் தனது மாடுகளை சந்தைக்கு , புதிய நெடுஞ்சாலை வழியே கொண்டு செல்லவேண்டி இருந்தது. அவருக்கு சத்தம் பிடிக்க வில்லை.

- Jayalakshmi Balasubramanian

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள் சிருங்கேரி ஸ்ரீனிவாஸ் என்கின்ற விவசாயி அவருடைய மிகச் சிறந்த  மாடுகளுடன் கிராம சந்தைக்குப் புறப்பட்டார். அவர் கிராமத்திற்கு பக்கத்தில் இருந்த புதிய தேசிய நெடுஞ்சாலை வழி செல்ல வேண்டியிருந்தது.

அந்த பெரிய சாலையில் நிறைய வாகனங்கள் சென்றன. எல்லா ஓட்டுனர்களும் வாகனங்களை கூச்சலிட்டுக்கொண்டு சென்றார்கள். பஹூன்! பொண்! ப்பா! மாடுகளுக்கு சத்தம் பிடிக்கவில்லை. அதனால் வீட்டிற்குச் செல்லும் திசையில் சென்றன. சிருங்கேரி ஸ்ரீனிவாஸால் மாடுகளை நெடுஞ்சாலை வழியில் அழைத்துச் செல்வதென்பது கடினமாகியது.

அவர் சத்தத்தை நிறுத்த சொல்லி ஓட்டுனர்களுக்குக் கை காட்டினார். ஆனால் அது உதவவில்லை. நெடுஞ்சாலையில் கை காட்டுவதைப் பார்த்து, இன்னும் சத்தம் போட்டார்கள். வாகனங்களின் சத்தம் அவர் மூளை வரை சென்று அங்கேயே நின்றது. அவருக்கு அது ஒரு கெட்ட நாள் ஆயிற்று. அவர் தன் மாடுகளுடன் வீட்டிற்கு சென்றார். மா! மறுபடியும் மாட்டுத் தொழுவம் சென்றதால் மாடுகள் மகிழ்ச்சி அடைந்தன.

பஹூன்! பொண்! ப்பா! சத்தம் அவர் காதில் பயிற்சி பெறாத இசைக்கலைஞர்களின் இசை போல ஒலித்துக் கொண்டிருந்தது. மற்ற சத்தங்களும் அதனுடன் இணைந்ததால், அவர் தினமும் கேட்கும் ஒலிகளும் அவருக்கு பெரும் சத்தம் ஆகிவிட்டது.

ரிப்பிட் ! ரிப்பிட் ! தவளையின் ஒலியும் சத்தம் ஆகிவிட்டது. சிள்வண்டு போடும் கிரிக்!கிரிக்! ஒலியும் சத்தம் ஆகிவிட்டது. சிருங்கேரி ஸ்ரீனிவாஸ் சத்தம் பொறுக்காமல், அலரும் ஆந்தையையும் திருப்பி அனுப்பினார். காலை நான்கு மணிக்கு கூவும் குயில் மேலே கோபப்பட்டார்.

மற்றும் காலை ஐந்து மணிக்கு கத்தும் மாடு மீதும் கோபப்பட்டார். யார்  சொன்னாரோசேவல்களை கடிகாரம் போல காலையில் கூவ? மற்றும் அந்த முட்டாள் புலி! "உறுமியது போதும், நிறுத்து!", என்று புலம்பினார்.

பாவம் சிருங்கேரி ஸ்ரீனிவாஸ், அவர் காதுகள் வறண்டு காயம் ஆகியது. அவர்  அமைதியாக இருக்க  முயற்சித்தார். அவர் குழந்தைகள் கத்திப் பேசினால் கூட சத்தம் போட்டார்.   குக்கர் விசில் போட்டால் அவர் மனைவி பர்வதம்மாவை முறைத்துப்  பார்த்தார்.

சிருங்கேரி ஸ்ரீனிவாஸுக்கு அமைதி  மட்டுமே தேவைப்பட்டது. எல்லோறும் உதவி செய்ய முயன்றனர். பர்வதம்மா  குழந்தைகளைத் திட்டவில்லை. குழந்தைகள் அமைதியாக கிரிக்கெட் விளையாட மென்மையான பந்து பயன்படுத்தினார்கள்.

மாடுகள் கத்துவதை நிறுத்திவிட்டன. சிள்வண்டும், ஆந்தையும் வேறொரு கிராமத்துக்குச் சென்றுவிட்டன.

புலி உறுமுவதை நிறுத்தியது.

ஆனால் இன்னும் சிருங்கேரி ஸ்ரீனிவாஸுக்கு சந்தோஷம் வரவில்லை. அவருக்கு எல்லோரும் அமைதியாக இருந்த போது கூட சத்தம் கேட்டது!

ஒரு நாள் காலை, "நான் ஊரைவிட்டுப் போய்விடுவேன்," என்றார் சிருங்கேரி ஸ்ரீனிவாஸ். "தயவு செய்து போகாதீர்கள். எங்கே போனாலும் உங்களுக்கு அமைதி கிடைக்காது" என்றார் பர்வதம்மா.

சிருங்கேரி ஸ்ரீனிவாஸ் முகச்சுளிப்புடன் ஊரைவிட்டு வெளியே நடக்க ஆரம்பித்தார்.

விரைவில், அவர் ஒரு புதிய நகரத்திற்கு அருகில் வந்தடைந்தார். அவர் அந்த இறைச்சலான நகரத்தில் சத்தம் போடும் மக்களைப் பார்த்தார்.ஒரு இளைஞன் அவரைக் கடந்து சென்றான். அவன் காதுகளில் இருந்து தொங்கும் கயிறு இருந்ததைப் பார்த்தார். சிருங்கேரி ஸ்ரீனிவாஸ் அதிலிருந்து ஒரு 'டிங் டங் டிங் டங்' பாடலைக் கேட்டார். அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதோடு அருகிலுள்ள லாரிகளின் இறைச்சலையும் கவனிக்கவில்லை.

"இது என்ன?" என்று அந்த இளைஞனிடம் கேட்டார். "இது என்னுடைய ஹெட்போன்கள். அணிந்து   பாருங்கள்", என்றார் இளைஞர். அவர் அதை சிருங்கேரி ஸ்ரீனிவாஸுக்கு  அணிவித்தும் விட்டார்.இசை! 'டிங் டங் டிங் டங்' மட்டும் கேட்டது. வேறு சத்தம் கேட்கவில்லை. "ஆஹா, எனக்கு இதுவே வேண்டும்" என்றார் ஸ்ரீனிவாஸ்.

சிருங்கேரி ஸ்ரீனிவாஸ் நகருக்குள் சென்று, மிகச் சிறந்த ஹெட்போன்களை வாங்கி அணிந்து கொண்டார். இனி…… வேறு சத்தம் இல்லை! அவர் தன் புதிய, பெரிய ஹெட்போன்களுடன் தன் ஊருக்கு வந்தார்.

அவர் மனைவிக்கு அவரை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. சிருங்கேரி ஸ்ரீனிவாஸ் அவரைப் பார்த்து பெரிதாய் புன்னகைத்தார். அவர் குழந்தைகள் அவருக்கு சில பாடல்களை ஹெட்போன்கள் மூலம் இணைத்து நல்ல இசையை கேட்கவைத்தார்கள்.

இப்போது, ​​சிருங்கேரி ஸ்ரீனிவாஸுக்கு கார்கள் மீது மிகுந்த கோபம் வந்தாலோ, அல்லது தவளைகள் மீதுகோபம்வந்தாலோ அவர் ஹெட்போன்கள் அணிந்து கொண்டு, அமைதியாய் நல்ல இசையைக்கேட்பார். கிராமத்தில், பசுக்கள் மீண்டும் சத்தம் போடுகின்றன. குயில்கள் திரும்ப வந்துவிட்டன. ரிப்பிட் ரிப்பிட் என்று , தவளைகள் சத்தம் போடுகின்றன. கிரிக்!கிரிக்! என்று சிள்வண்டு பாடுகின்றது.

​​ஆனால் நெடுஞ்சாலையில் உள்ள கார்கள் இன்னமும் அதிக சத்தம் போடுகின்றன. பஹூன்! பொண்! ப்பா! அது ஒரு நல்ல ஒலியே அல்ல. ​​சிருங்கேரி ஸ்ரீனிவாஸ் விரைவில் தனது மாடுகளை கிராம சந்தைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும். அவைகளும் ஹெட்போன்கள் கேட்குமோ?