இன்று என்ன வீடு கட்டலாம்?
மூங்கில் சுவர்களும் கல் கதவும் வைத்து ஒரு தொடவர் குடிசை கட்டலாமா?
மண்ணை வைத்து புங்கா வீடு கட்டலாமா?
நிலவைப் பார்த்துக் கையாட்ட மரத்தாலான பால்கனியுடன் காஷ்மீர வீடு கட்டலாமா?
நீரில் மிதக்கும் கட்டுவல்லம் படகு வீட்டை மரத்தால் கட்டலாமா?
நீளமாக வளரும் காட்டுப் புல்லால் கூரை வேய்ந்து நாகர்களின் குடிசை வீடு கட்டலாமா?
மணல்பாறை கொண்டு ஜெய்சல்மீரின் ஹவேலி ஒன்றைக் கட்டலாமா?
இன்று என்ன வீடு கட்டலாம்?
மூங்கில் கழிகளின் மேல் நிற்கும் நிக்கோபர் வீடு ஒன்றைக் கட்டலாமா?
வஞ்சி மரத்தின் சிறு கிளைகளை கூரையாக்கி, கல்லும் செங்கல்லும் வைத்து லடாக் வீடு கட்டலாமா?
சூரிய சக்தியால் இயங்கும் வீட்டைக் கட்டலாமா?
சிமெண்ட் கல்லும் காரையும் வைத்து பெரிய நகர்ப்புற அடுக்குமாடி வீட்டைக் கட்டலாமா?
இன்று எந்த வீட்டைக் கட்டலாம்?
அந்த வீட்டுக்கு வந்து என்னைச் சந்திப்பீர்களா?