ennai polave

என்னை போலவே

ரஹாவின் பிறந்தநாள் விழா. அம்மா யார் யாரை அழைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார். அனைவரும் அந்த விழாவிற்கு பொருந்துவார்களா?

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அடுத்த வாரம் ரஹாவின் பிறந்தநாள்.

அவள் தனது புதிய நண்பர்களை பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறாள்.

"யாரை நீ அழைக்க விரும்புகிறாய்?" என்று அம்மா கேட்டாங்க. "நீ பள்ளிக்கு சென்று சில மாதங்கள் மட்டுமே ஆகிறது."

"எல்லா குழந்தைகளும் வெவ்வேறு விதமாக இருக்கிறார்கள் அல்லவா?"

"இல்லை, அம்மா. எனக்கு நிறைய புது நண்பர்கள் இருக்கிறார்கள்," என்றாள் ரஹா.

"நான் ஜெறீனாவை அழைப்பேன். அவளுக்கும்  பாலே ஆடல் நங்கை ஆக வேண்டுமாம்,  என்னை போலவே!"

"ஓ, அட்டகாசம்," என்றார் அம்மா. " அப்போது கொஞ்சம் நடன இசையையும் வாசிப்போம்."

"சிகெலேலேயும் வர முடியும் என்று நம்புகிறேன்.

அவன் பள்ளி பாடகர் குழுவில் பாடுகிறான், என்னைப் போலவே."

"ஓ, சிறப்பு - நாம் அனைவரும் பாட்டு பாடியும் மகிழலாம்."

“நாம் சுசீலாவையும் அழைக்கலாமா?  அவளிடம் பஞ்சுபோன்ற பூனைக்குட்டிகள் உள்ளன, என்னை போலவே."

"கண்டிப்பாக அவளையும் அழைக்கலாம். நம்  பூனைக்குட்டிகளுடன் அவளும் விளையாடி மகிழ்வாள்."

"நாம் யோங்னாமையும் அழைக்க வேண்டும்.  அவள் என்னை விட அதிகமாகவே இளஞ்சிவப்பு இனிப்பு கிண்ண ரொட்டிகளை விரும்புகிறவள்."

இனிப்பு கிண்ண ரொட்டிகள் - Cupcakes

"அதிர்ஷ்ட வசமாக நானும் இனிப்பு கிண்ண ரொட்டிகளை தயாரிக்கிறேன்," என்றார் அம்மா.

"அவளுக்கு பிடித்த  இளஞ்சிவப்பு நிறங்களை விருந்தாக அளித்திடுவோம்."

“ஆ நன்றி, அம்மா! நான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்."

"ஓ ரஹா! நானும் உன் நண்பர்களை சந்திக்க ஆவலுடன் இறுக்கிறேன்.

அவர்களும்  மிக சிறந்தவர்கள், உன்னைப் போலவே!"

"ஆனால் உங்களை பற்றி சொல்லவே இல்லை? உங்களுக்கு புத்தகங்கள் பிடிக்கும் அல்லவா... என்னை போலவே!

நீங்களும் என்னுடைய பிறந்தநாள் வழாவிற்கு வருகிறீர்களா?"