நான் ஒரு பெரிய பையன்.
என்னால் படிகள் ஏறிச் செல்ல முடியும்.
ஆனால், ஏறியப் பின்னர் இறங்கத் தெரியாது.
என்னால் நாற்காலியின் மீது ஏற முடியும்.
ஆனால் இறங்க முடியாது.
என்னால் நாற்காலியின் மீது ஏறி பின் மேஜை மீது எற முடியும்.
ஆனால் பின்னர் இறங்க முடியாது.
"அப்பா! அப்பா!" என்று கத்துகிறேன்.அப்பா சிரித்துக் கொண்டே வந்து. "கண்ணா! கீழே இறங்கக் கற்றுக்கொள்!" என்று சொல்கிறார்.
எனக்கு பயமாக இருக்கிறது. இருந்தாலும், நான் அழ வில்லை.
மெதுவாக, நான் மேஜையில் இருந்து கீழே இறங்குகிறேன், பின்னர் நாற்காலியில் இருந்து இறங்குகிறேன்.
இறுதியாக, நான் கீழே இறங்கக் கற்றுக்கொண்டேன்.